திருமண பந்தத்தில் பிரபலங்கள்.  
சிறப்புக் கட்டுரைகள்

சமந்தா முதல் சாக்‍ஷி அகர்வால் வரை... 2025- திருமண பந்தத்தில் இணைந்த பிரபலங்கள்!

2025 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த திரை பிரபலங்கள் குறித்து....

பா. சசிகுமார்

2025 ஆம் ஆண்டு நம்மைவிட்டு விடைபெற இன்னும் சில நாள்களே இருக்கிறது. காலம் யாரையும் காத்திருக்காமல் தொடர்ந்து நகர்கிறது. பழைய ஆண்டு நம்மிடம் இனிய நினைவுகளையும், கற்றுக் கொண்ட பாடங்களையும் விட்டுச் செல்கிறது.

புதிய ஆண்டு நம்பிக்கை, மாற்றம் மற்றும் புதிய கனவுகளுடன் நம்மை வரவேற்கிறது. வழக்கமான இந்த ஆண்டும் சினிமாவிலும் ஏராளமான நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன. அப்படி இந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த திரை பிரபலங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

சமந்தா, ராஜ் திருமணம்

நடிகை சமந்தா, பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமொருவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 1ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

ராஜ் இயக்கிய தி ஃபேமிலி மேன் இரண்டாம் சீசனிலும் சிட்டாடெல் ஹனி பன்னி தொடரிலும் சமந்தா நடித்திருந்தார். ராஜ் மற்றும் சமந்தாவுக்கு இது இரண்டாவது திருமணமாகும்.

சம்யுக்தா, அனிருதா திருமணம்

நடிகை சம்யுக்தாவும், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் மகன் அனிருதாவும் நவம்பர் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். மிகவும் எளிமையான முறையில் இவர்கள் திருமணம் நடந்து முடிந்தது.

இது இருவருக்கும் இரண்டாவது திருமணம் ஆகும். 2007-ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர் சம்யுக்தா. இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

சாக்‌ஷி அகர்வால் - நவ்னீத் திருமணம்

பிக்பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கும், தொழில் அதிபர் நவ்னீத் மிஸ்ராவுக்கும் ஜனவரி 2-ஆம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற்றது.

இருவரும சிறுவயதில் இருந்தே பழகி வந்த நிலையில் திருமண பந்தத்தில் இணைந்தனர். சாக்‌ஷி அகர்வால் காலா படத்தில் ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்தார்.

அபிநயா திருமணம்

நாடோடிகள் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் அபிநயா. இவருக்கும் அவரின் காதலர் சன்னி வர்மாவுக்கும் ஏப்ரல் 16ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது.

சன்னி வர்மாவும், அபிநயாவும் கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள். செவித் திறன், பேச்சுத் திறன் இல்லாத மாற்றுத் திறன் நடிகைதான் அபிநாயா.

பார்வதி நாயர் திருமணம்

நடிகை பார்வதி நாயர் தனது நீண்ட நாள் காதலரும், தொழிலதிபருமான ஆஷ்ரித் அசோக் என்பவரை பிப்ரவரி 10ஆம் தேதி மணமுடித்தார். இவர்களின் திருமணம் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

'உத்தம வில்லன்', 'எங்கிட்ட மோதாதே', 'நிமிர்', 'என்னை அறிந்தால்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் பார்வதி நாயர்.

பாடகர் அறிவு திருமணம்

'ராப்' பாடகர், பாடலாசிரியர் அறிவு தனது நீண்ட நாள் காதலி கல்பனாவைக் கைப்பிடித்திருக்கிறார். இருவருக்கும் ஜனவரி 11ஆம் தேதி இளையராஜா தலைமையில் திருமணம் நடைபெற்றது.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில், இடம்பெற்ற உரிமையை மீட்போம் பாடல் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமானவர் தெருக்குரல் அறிவு. அறிவு போலவே கல்பனாவும் ஒரு சமூக செயற்பாட்டாளர்.

கிஷன் தாஸ் திருமணம்

'முதல் நீ முடிவும் நீ' படத்தின் மூலம் அறிமுகமான கிஷன் தாஸ் அவரது நீண்ட நாள் காதலியான சுச்சித்ராவை ஜனவரி 31ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. 90களின் பிரபல சீரியல் நடிகையான பிருந்தா தேவியின் மகன்தான் கிஷன் தாஸ்.

2025- Celebrities who tied the knot!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் தடை செய்த ஆவணப்படத்தின் பாலஸ்தீன இயக்குநர் காலமானார்!

TVKவில் இணைகிறாரா OPS? செங்கோட்டையன் பதில்! | செய்திகள்: சில வரிகளில் | 25.12.25

திமுகவை வீழ்த்துவது மட்டுமே ஒற்றை இலக்கு: அண்ணாமலை

ரூ. 5-க்கு நாள்தோறும் சத்தான சாப்பாடு! தில்லி அரசு அறிவிப்பு!

2025-ல் தில்லியில் சிறுமிகள், பெண்கள் உள்பட 23,000 பேர் மாயம்!

SCROLL FOR NEXT