ஒடிஸா மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் சற்றும் எதிர்பாரா தது. 2000 முதல் தொடர்ந்து 24 ஆண்டுகளாக மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்ற முதல்வராக வலம் வந்த நவீன் பட்நா யக்கின் பிஜு ஜனதா தளம் ஆட்சியை இழந்தது மட்டுமல்லாமல், அவ ரும் ஒரு தொகுதியில் தோல்வியைத் தழுவி இருப்பது சற்றும் எதிர்பாராதது.
மேலும் 78 நாள்கள் முதல்வராக தொடர்ந்திருந்தால் வரலாறு படைத் திருப்பார் நவீன் பட்நாயக். 25 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி தலைவர் பவன்குமார் சாம்லிங்கின் சாதனையை நவீன் பட்நாயக் முறியடித்திருக்கக்கூடும்.
147 உறுப்பினர்கள் கொண்ட ஒடிஸா சட்டப் பேரவையில் 78 இடங் களை வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கி றது பாரதிய ஜனதா கட்சி. 51 இடங்களில் பிஜு ஜனதா தளமும், 14 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றிருக்கின்றன. முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் பிரதமர் மோடியை முன்னிறுத்தி பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
பிஜு ஜனதா தளத்தின் வாக்கு விகிதம் 2019-இல் பெற்ற 44.71%-இலிருந்து, இப்போது 40.226-ஆக சரிந்திருக்கிறது. பாஜக வின் வாக்கு விகிதம் 2019-இல் 32.4%-ஆக இருந்தது. தற்போது 40.07%-ஆக அதிகரித்திருக்கிறது. பாஜகவைவிட சற்று அதிகமாக பிஜு ஜனதா தளத்தின் வாக்கு விகிதம் இருந்தும்கூட, குறைவான இடங் களைத்தான் அதனால் பெற முடிந்திருக்கிறது.
திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவராக உயர்த்தியதன் பலனை பாஜக ஒடிஸா தேர்தலில் பெற முடிந்தது எனலாம். திரௌபதி முர்முவின் சொந்த மாவட்டமான மயூர்பஞ்சில் அத்தனை இடங்களையும் பாஜக வென்றது.
பிஜு ஜனதா தளத்திற்கு எதிரான மனநிலை பரவலாக காணப்பட் டதை முடிவுகள் உணர்த்துகின்றன. நவீன் பட்நாயக் போட்டியிட்ட இரு தொகுதிகளில் ஒன்றான காந்தபாஞ்சியில் அவர் தோல்வியைத் தழுவியி ருக்கிறார். கடந்த 24 ஆண்டுகளில் ஒருமுறைகூடத் தோல்வியை சந்திக் காத நவீன் பட்நாயக்குக்கு இது மிகப் பெரிய பின்னடைவு.
சட்டப் பேரவை தேர்தல் வெற்றியைவிட பாஜகவின் மக்களவைத் தேர்தல் வெற்றி குறிப்பிடத்தக்கது. ஓடிஸாவில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 20 இடங்களை பாஜக கைப்பற்றியிருக்கிறது. ஒரு தொகு தியை காங்கிரஸ் வென்றிருக்கிறது. 2019-இல் 12 தொகுதிகளில் பிஜு ஜனதா தளமும், 8 தொகுதிகளில் பாஜகவும் வெற்றி பெற்றன.
கடந்த 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறா விட்டாலும், மோடி அரசுக்கு எல்லாவிதங்களிலும் மறைமுகமான ஆத ரவை பிஜு ஜனதா தளம் வழங்கியது. ஓடிஸாவில் செல்வாக்குமிக்க தலைவராகத் திகழ்ந்த பிஜு பட்நாயக்கின் மரணத்தைத் தொடர்ந்து, அர சியலுக்குத் தொடர்பே இல்லாமல் இருந்த மகன் நவீன், பாஜக தலைவர் அத்வானியால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டார். பிஜு ஜனதா தளம்- பாஜக கூட்டணி அமைந்தது.
வலுவான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸின் செல்வாக்கைக் குறைக்கவும், எதிர்க்கட்சி வாக்குகளை பிளவுபடுத்தவும் பின்னர் அந்தக் கூட்டணியை முடித்துக்கொண்டார் நவீன் பட்நாயக். அவருடைய சாதுர் யமான முடிவால் காங்கிரஸ் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு பாஜக எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிஜு ஜனதா தளம் இணைவதற்குப் பேச்சு வார்த்தை நடந்தது. தனித்துப் போட்டியிடும் முடிவை பாஜக திடீரென எடுத்ததன் காரணம் இப்போது தெளிவாகிறது. தொடர்ந்து ஐந்து முறை நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சியில் இருந்ததற்கு பல வளர்ச்சித் திட்டங்களும் மக்கள் நல் வாழ்வுத் திட்டங்களும் காரணங்கள். அவற்றை வடிவமைத்துக் கொடுத் ததில் முதல்வரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சில தமிழக ஐனஸ் அதி காரிகள் பெரும்பங்கு வகித்தனர். அவர்களில் ஒடிஸாவைச் சேர்ந்த பெண் மணியைத் திருமணம் செய்துகொண்ட தமிழரான வி.கே. பாண்டியன் முதன்மையானவர்.
முதல்வரின் நம்பிக்கைக்கு பாத்திரமான பாண்டியனின் அதீத செல்வாக்கும் முக்கியத்துவமும் பிஜு ஜனதா தளத் தலைவர்களில் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியதில் வியப்பில்லை. அதை பிரதமர் மோடியும் பாஜகவும் சாதகமாகப் பயன்படுத்தி தங்கள் பிரசாரத்தை வடிவமைத்தனர்.
நவீன் பட்நாயக்கின் முதுமை, உடல்நலக்குறைவு, அவர் பாண்டிய னின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு, எல்லாவற்றிற் கும் மேலாக புரி ஜகந்நாதர் ஆலயத்தின் கஜானா அறையான ரத்னபண் டாரின் சாவி காணாமல் போனது ஆகியவை முன்னிலைப்படுத்தப் பட்டு, 24 ஆண்டு நவீன் பட்நாயக் ஆட்சி பாஜகவால் அகற்றப் பட்டிருக்கிறது.
50 வயதைக் கடந்த பிறகுதான் நவீன் பட்நாயக் அரசியலில் நுழைந் தார். தில்லிவாசியாக இருந்த அவர் தாய்மொழியான ஒடியா பேசத் தெரி யாதவராக இருந்தும்கூட, பிஜு பட்நாயக்கின் மகன் என்பதால் மக்கள் அவரை ஏற்றுக்கொண்டனர். எந்தவித ஊழல் குற்றச்சாட்டையோ தனிப் பட்ட முறையிலான விமர்சனத்தையோ அவர்மீது எதிர்க்கட்சிகளால் வைக்க முடியவில்லை.
தொடர்ந்து 24 ஆண்டுகளுக்கு மேலாகத் தனிப்பெரும் செல்வாக்கு டன் வலம் வந்தவர் நவீன் பட்நாயக். பிஜு ஜனதா தளத்தின் முக்கிய தலைவர்கள் பலர் விலகியபோதும்கூட ஆட்டம் காணாத அவரது ஆட்சி, அவரது நெருக்கமான நண்பராகக் கருதப்பட்ட நரேந்திர மோடியால் அகற்றப்பட்டிருக்கிறது. நவீன் பட்நாயக்கின் உடல்நிலையும் அவரது ஆட்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளின் ஆதிக்கமும் பாஜக வின் பிரசாரத்தில் அவரை வீழ்த்த முன்னெடுக்கப்பட்டன.
அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது; நிரந்தர எதிரிகளும் கிடையாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.