முகப்பு
கல்வி

கலசலிங்கம் பல்கலை. சார்பில் மதுரையில் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில், மதுரை மாவட்டத்தில் உள்ள பிளஸ் 2 மாணவர்கள் அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவதற்கான கல்வி வழிகாட்டி நிகழச்சி ஞாயிற்றுக்கிழமை மதுரை லட்சுமி சுந்தரம் மஹாலில் நடைபெற்றது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:47 PM
பகிர்:

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில், மதுரை மாவட்டத்தில் உள்ள பிளஸ் 2 மாணவர்கள் அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவதற்கான கல்வி வழிகாட்டி நிகழச்சி ஞாயிற்றுக்கிழமை மதுரை லட்சுமி சுந்தரம் மஹாலில் நடைபெற்றது.

பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் வரவேற்றார்.

வேந்தர் க.ஸ்ரீதரன் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று, குத்துவிளக்கேற்றி வைத்துப் பேசுகையில் கூறியதாவது: பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் மதுரை மாவட்டத்தில் முதலிடம் பெறும் மாணவருக்கு கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக்., விரும்பும் பாடப்பிரிவு 100 சதவீத கல்விக் கட்டண சலுகையுடன் வழங்கப்படும். மேலும் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெறும் மாணவருக்கு 50 சதவீத கல்விக் கட்டண சலுகை வழங்கப்படும் என்றார்.

துணை வேந்தர் பி.கன்னியப்பன் முன்னிலை வகித்துப் பேசுகையில் கூறியதாவது:

கலசலிங்கம் பல்கலைக்கழகம் மேல்நிலைப் பள்ளிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, ஸ்கூல் லிங்கேஜ் புரோகிராம் என்னும் திட்டத்தைத் தொடங்கவுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்று தேவைப்படும் போதெல்லாம் வரவழைக்கப்பட்டு அனைத்து ஆராய்ச்சிக்கூடங்களையும் பார்க்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் அவர்களுக்கு பாடம் தொடர்பான பிரச்னைகளில் தீர்வுகாண தக்க நடவடிக்கை எடுக்கப்படும். கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்பில் சேரும் அனைவருக்கும் பல்கலைக்கழகம் சார்பில் வங்கிக் கடன் பெற்றுத்தரப்படுகிறது என்றார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சு.நாகராஜமுருகன், மதுரை மாநகராட்சி ஆணையர் ரா.நந்தகோபால் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

பிளஸ் 2 பாடங்களில் சிறப்பு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு வந்திருந்த மாணவ மாணவியருக்கு அரசு பொதுத் தேர்வை பயமின்றி எதிர்கொண்டு, அதிகம் மதிப்பெண்கள் பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் சுமார் 2300 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்டத்தில் மத்திய, மாநில நல்லாசிரியர் விருது பெற்ற 15 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைப் பிரிவு இயக்குநர் சு.கண்ணன் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →