சத்யா வித்யாலயாவில் மாறுவேடப் போட்டி
ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளத்தில் உள்ள சத்யா வித்யாலயா, சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவ மாணவியருக்கான மாறுவேடப் போட்டி தாளாளர் சி.குமரேசன் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளத்தில் உள்ள சத்யா வித்யாலயா, சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவ மாணவியருக்கான மாறுவேடப் போட்டி தாளாளர் சி.குமரேசன் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் பி.முருகதாசன் வரவேற்றார்.
மாணவ மாணவியர் பல புதுமையான வேடங்களில் வந்து போட்டியில் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் அமுதா தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர். துணை முதல்வர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
Advertisement