முகப்பு
கல்வி

ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சித் தலைவர் ஆலோசனை

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அகாடமியில்,

கல்வி

ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சித் தலைவர் ஆலோசனை

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அகாடமியில்,

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அகாடமியில், குடிமைப் பணித் தேர்வு எழுத பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சிவஞானம் ஆலோனை வழங்கினார்.

பயிற்சி முடித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வழியனுப்பும் விழா மற்றும் தற்போது பயிற்சியில் உள்ள பி.டெக். மற்றும் எம்.பி.ஏ. மாணவர்களுக்கு குடிமைப் பணித் தேர்வில் எடுத்துக்கொள்ள வேண்டிய பயிற்சி குறித்து தெரிவிக்கும் நிகழ்ச்சி இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் திருவேங்கடசாமி வரவேற்றார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சிவஞானம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: குடிமைப் பணித் தேர்விற்கு கல்வித் தகுதி இளநிலை பட்டப்படிப்பாக இருந்தாலும், தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் முதுநிலைப் படிப்பிற்கும் அப்பாற்பட்டு பல பாடங்களிலிருந்து கேட்கப்படும். எனவே மாணவர்கள் தங்களின் தொடக்கக் கல்வியிலிருந்தே இதற்கான குறிக்கோளுடன் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இறுதிகட்ட நேர்காணலில் தாம் பொறியியல் பட்டம் முடித்து, வங்கி மற்றும் பொறியியல் வேலையைச் துறந்து ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு வந்ததற்கு காரணம் கேட்டார்கள். அரசு குடிமைப்பணி ஒரு மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அதில் தாம் பயணித்து முடிந்த அளவு இருக்கும் சில துவாரங்களை அடைக்க முடியும் என்று கூறியவுடன், தாம் தேர்வு செய்யப்பட்டதாக ஆட்சித் தலைவர் கூறினார்.ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு ஒட்டுமொத்த தனித்திறமையை வளர்க்க வேண்டும். தனிப்பட்ட ஒருவன் படித்து பயிற்சி மட்டும் பெற்றுவிட்டால் மட்டும் போதாது. தான் சமுதாய மக்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய முடியும் என்ற திட்டம் வேண்டும். கல்வி என்பது மாணவர்களுக்கு 4 அல்லது 6 ஆண்டு முடிவில் அனுபவ முதிர்ச்சியைத்தான் கொடுக்கும். அதனால் முழுக் கல்வியை பெற்றுவிட்டோம் என்று ஆகாது.

காலங்காலமாய் இருக்கும் அரசு கொள்கைப் பணிகளுக்கு, மக்களிடமிருந்து கருத்துக் கணிப்பு பெற்று அதனை, அதற்கேற்ப மாற்றும் திறமை வேண்டும் என்றார் ஆட்சித் தலைவர் சிவஞானம்.பின்னர் ஆட்சித் தலைவர் பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். நிகழ்ச்சியில் துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எம்.எஸ்.டபிள்யூ. துறைத் தலைவர் ஆஷிபா நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →