முகப்பு
கல்வி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு நாள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:02 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா தலைமையில் மாணவ மாணவியர் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மேலும் குழந்தைகள் தாங்கள் வாங்கி வந்த மெழுகுவர்த்தியை ஏந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு ஒற்றுமையுடன் உழைப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.வறுமையிலிருந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர் என்று நிகழ்ச்சியில் பேசிய ஆசிரியர்கள் அப்துல் கலாமிற்கு புகழாரம் சூட்டினர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ மாணவியர் மற்றும் கிராம கல்விக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி மாணவ மாணவியருக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →