முகப்பு
கல்வி

ஸ்ரீவில்லிபுத்தூரில் உயர் தொடக்க நிலை ஆசிரிர்களுக்கான பயிற்சி 

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்தில் உள்ள உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் கல்வியில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு வலுவூட்டல் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்தில் உள்ள உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் கல்வியில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு வலுவூட்டல் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பயிற்சியை நகர்மன்ற மேட்டுத் தெரு குறுவளமையத்தில் தொடங்கி வைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி கருத்துரையாற்றினார். அப்போது கூறியதாவது:படைப்பாற்றல் கல்வி ஒவ்வொரு குழந்தையும் தானாக, நேரடியாகக் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட்டு தெளிவு பெற்று புரிதல் நிலை அடைந்து படைப்புகள் பல படைத்திட வழி வகை செய்கிறது.

ஒவ்வொரு மாணவனும் பாடப்பொருளை தனது சுய முயற்சியால் மனவரைபடம் வரைவதும், கருத்துக்களைத் தொகுப்பதுமான வேலையைச் செய்வதால், கற்றலானது ஆழமுடைய கற்றல் ஆகிறது. மேலும் தான் கற்றவற்றை பகிர்ந்துகொள்வதின் மூலம் கற்ற தகவல்கள் மறக்காமல் நிலை நிறுத்தப்படுகிறது என்றார் அவர்.4 மையங்களில் நடைபெற்ற இப் பயிற்சியில் 150 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதன் கருத்தாளர்களாக ஆசிரியப் பயிற்றுநர்கள் செயல்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →