ஸ்ரீவில்லிபுத்தூரில் 125 பள்ளிகளைச் சேர்ந்த 9750 மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வி துறையின் கீழ்
கல்விஸ்ரீவில்லிபுத்தூரில் 125 பள்ளிகளைச் சேர்ந்த 9750 மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வி துறையின் கீழ்
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வி துறையின் கீழ் உள்ள 125 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2-ம் பருவத்திற்கான விலையில்லா சீருடை, புத்தகம், நோட்டு உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பட்டதாரி ஆசிரியை பா.பாத்திமா ஞானம் முன்னிலையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவல் கி.சீனிவாசன் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா பொருட்களை வழங்கி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசின் உத்தரவுப்படி, பள்ளி திறக்கும் நாளன்றே எல்லா விலையில்லா பொருட்களும் வழங்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இன்று மாணவர்களின் படிப்பிற்குத் தேவையான விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகிறது. நாங்கள் பள்ளிகளில் படித்த காலங்களில் விலை கொடுத்து புத்தகங்கள் வாங்கிப் படித்தோம். கிராமப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த அப்துல் கலாம் நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தார். நீங்கள் கல்வியில் முழுக் கவனமும் செலுத்தி, படித்து நாட்டிற்கு சேவை புரிய வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ச.பொன்மலர், செ.சண்முகநாதன், வே.ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Attachments area
|
Show details