கலசலிங்கம் பல்கலை.க்கு சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விருது
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விருதை வழங்கியுள்ளது.
கல்விகலசலிங்கம் பல்கலை.க்கு சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விருது
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விருதை வழங்கியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விருதை வழங்கியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் யாவரும் கேளீர் நிகழ்ச்சி ராஜபாளையத்தில் பட்டிமன்ற பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் துரைச்சாமி, கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
1984-ம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் தற்போது பல்கலைக்கழகமாக தரம் உயர்ந்து கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு சேவை செய்து வருவதைப் பாராட்டி, சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விருதை துணை வேந்தர் ச.சரவணசங்கரிடம், கு.ஞானசம்பந்தன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் டீன் பொது நிர்வாகம் டாக்டர் எஸ்.ஆர்.ஸ்ரீகுமார், துணைப் பதிவாளர் பி.ஜி.குருசாமிபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.