கல்வி

பி.எட். கலந்தாய்வு: முதல் நாளில் 118 பேர் சேர்க்கை

DIN

பி.எட். கலந்தாய்வின் முதல் நாளில் 118 மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற்றனர்.
2 ஆண்டு பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் திங்கள்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்குகியது.
முதல் நாள் கலந்தாய்வுக்கு பார்வைக் குறைபாடு உடைய 35 பேர், மாற்றுத்திறனாளிகள் 83 பேர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 21 பேர், பழங்குடியின பிரிவு மாணவர்கள் 18 பேர் என மொத்தம் 157 பேர் அழைக்கப்பட்டனர்.
இவர்களில் பார்வைக் குறைபாடுடையோர் 31 பேர், மாற்றுத்திறனாளிகள் 53 பேர்,
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 19 பேர், பழங்குடியினர் 15 பேர் என 118 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். வரும் சனிக்கிழமை வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT