கல்வி

நீட் தேர்வு விவகாரம்: மத்திய அமைச்சருடன் நாளை சந்திப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

DIN

நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை வெள்ளிக்கிழமை (மார்ச் 24) தில்லியில் சந்திக்க உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் கோவி.செழியன் பேசும்போது, 'நீட் தேர்வுக்கு திமுக ஆட்சியில் விலக்கு அளிக்கப்பட்டது. இப்போதும் விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்' என்றார்.
அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் குறுக்கிட்டு, 'நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. அரசியல்ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து வருகிறோம்' என்றார்.
கிராமப்புற மாணவர்களுக்காக...மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கோ அல்லது நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கோ நீட் தேர்வில் நாங்கள் விலக்கு கேட்வில்லை. கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களுக்காகத்தான் அரசு போராடுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை வெள்ளிக்கிழமை (மார்ச் 24) நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். நான், சுகாதாரத் துறைச் செயலாளர், உயர்கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் தில்லி சென்று அவரை சந்திக்க உள்ளோம்.
நீட் தேர்வு விலக்கு மசோதா ஆளுநரின் ஒப்புதல் பெற்று மத்திய அரசின் பார்வையில் உள்ளது. எனவே, இந்தத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதிலும், மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்காகத்தான் இந்தச் சட்டப் போராட்டத்தை நடத்துகிறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT