கல்வி

பணிபுரிபவர்களுக்கான எம்.பி.ஏ. படிப்பு: சென்னை ஐஐடி அறிமுகம்

DIN

பணியில் இருப்பவர்களுக்கான இரண்டு ஆண்டு எம்.பி.ஏ. படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்தி: பணியில் இருப்பவர்கள் சேர்ந்து படிக்கும் வகையில் இரண்டு ஆண்டுகள் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்களின் இன்றைய தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலும் டிஜிட்டல் பொருளாதாரம் எதிர்கால உற்பத்தித் துறை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலும் இந்த எம்.பி.ஏ. படிப்பு வழங்கப்பட உள்ளது. 
வரும் ஜனவரி முதல் வகுப்புகள் தொடங்கப்படும். வார இறுதி நாள்களில் வகுப்புகள் நடத்தப்படும்.இப்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க நவ.30 கடைசி நாளாகும்.
சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் ஏதாவது ஒரு பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு தொழில்நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT