கல்வி

பள்ளி நேரங்களில் மாணவர்களுக்கு ஏன் சிறப்பு பேருந்து இயக்கக் கூடாது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

DIN

சென்னை: பள்ளி நேரங்களில் மாணவர்களுக்கு ஏன் சிறப்பு பேருந்து இயக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு, போக்குவரத்துக் கழகம் நாளை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் அதிக அளவில் தொங்கிக்கொண்டும், பேருந்து மேற்கூரையில் ஏறிக்கொண்டும் ஆபத்தான பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இப்படி பயணம் செய்யும்போது மற்ற பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதுடன், மாணவர்களும் விபத்தில் சிக்க நேரிடுகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒரு மனு தாக்கல் செய்தார். 

மாணவர்கள் பேருந்து மேற்கூரைகளில் பயணம் செய்தது மற்றும் படிக்கட்டில் தொங்கிகொண்டு பயணம் செய்த புகைப்படங்களை காட்டி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணை நடந்தது. விசாரணையை அடுத்து, பேருந்துகளில் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தடுக்கும் விதமாக பள்ளி நேரங்களில் மாணவர்களுக்கு ஏன் சிறப்பு பேருந்து இயக்கக் கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

மேலும் இதுகுறித்து தமிழக அரசு மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகம் நாளை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT