கல்வி

இந்திய முறை மருத்துவப் படிப்புகள்: 188 இடங்கள் நிரம்பின

DIN

சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் மொத்தம் 188 இடங்கள் நிரம்பின.
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை அரும்பாக்கம் இந்தியமுறை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது. இந்தப் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 390 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 671 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் என மொத்தம் 1,061 இடங்கள் உள்ளன.
ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு முற்பகல் நடைபெற்றது. பிற்பகலில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
முதல்நாள் கலந்தாய்வின் முடிவில் மொத்தம் 188 இடங்கள் நிரம்பின. மீதம் உள்ள 873 இடங்களுக்கு தொடர்ந்து வியாழக்கிழையும் கலந்தாய்வு நடைபெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT