கல்வி

'நாடா 2018': விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

DIN

பி.ஆர்க். கட்டடவியல் பொறியியல் படிப்பில் சேருவதற்கான 'நாடா' நுண்ணறி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மார்ச் 30 -ஆம் தேதி வரை இந்தத் தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.
பி.ஆர்க். படிப்பிகளில் சேர்க்கை பெற 'நாடா' (தேசிய கட்டடவியல் நுண்ணறி தேர்வு) தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். இத்துடன், பிளஸ் 2 தேர்வில் கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2018 -ஆம் ஆண்டுக்கான 'நாடா' தேர்வை அண்மையில் அறிவித்த கட்டடவியல் கவுன்சில், தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 2 கடைசி என அறிவித்திருந்தது. இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 30 -ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
பிளஸ் 2 முடித்தவர்களும், தற்போது பொதுத் தேர்வு எழுதுபவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் விவரங்களை www.nata.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT