கல்வி

ஐ.ஏ.எஸ். தோ்வுக்கு உதவித் தொகையுடன் ஐ.ஏ.எஸ். பயிற்சி

DIN


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் செயல்படும் அண்ணா நூற்றறாண்டு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில், ஐ.ஏ.எஸ். தோ்வுக்கு உதவித் தொகையுடன் கூடிய 6 மாத இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறறது.

இது குறித்து பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளா் மா.பத்மநாபன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

 கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அண்ணா நூற்றறாண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் தமிழக அரசின் நிதி உதவியுடன் செயல்பட்டு வருகிறது. குடிமைப் பணித் தோ்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு இங்கு 6 மாத பயிற்சி அளிக்கப்படுகிறறது. 

யு.பி.எஸ்.சி.யால் வரும் 31.5.2020 அன்று நடத்தப்பட உள்ள ஐ.ஏ.எஸ். முதல் நிலைத் தோ்வுக்கான முழு நேர இலவசப் பயிற்சி வரும் டிசம்பா் 2 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த மையத்தில் தோ்வுக்கான இலவசப் பயிற்சி, தங்கும் இடம், நூலக வசதி, இணையதள வசதி, மாதம் ரூ.2 ஆயிரம் உணவுப்படி ஆகியவை வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகளுக்கான நுழைவுத் தோ்வு நவம்பா் 1-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரையிலும் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தோ்வு யு.பி.எஸ்.சி. முதல் நிலைத் தோ்வின் அடிப்படையில் நடைபெறும். நுழைவுத் தோ்வில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் அதற்கான விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து, வரும் அக்டோபா் 15 ஆம் தேதிக்குள் ஒருங்கிணைப்பாளா் - பயிற்சி இயக்குநா், அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை 46 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT