கியூட் தேர்வு Center-Center-Delhi
கல்வி

கியூட் தேர்வு: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட என்டிஏ

கியூட் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது என்டிஏ

DIN

முதுகலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு (கியூட்) விண்ணப்பித்த மாணவர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமையான என்டிஏ வெளியிட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கு, ஜனவரி 2ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு பிப்ரவரி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

2025ஆம் ஆண்டு மார்ச் 13 முதல் 31ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் பூர்த்தி செய்து அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் தேர்வு மையங்கள் உள்பட 312 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வுக்கு நேரத்துக்கு வர வேண்டும், தேர்வறை முழுக்க முழுக்க சிசிடிவி கண்காணிப்பில் இருக்கும். ஆதார் அட்டையைக் கொண்டு வர வேண்டும், தேர்வறையின் வாயில் மூடப்பட்ட பிறகு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கையில் ஒரு குடிநீர் பாட்டீல், பேனா, நுழைவுச் சீட்டு, கூடுதலாக ஒரு புகைப்படம், அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர வேறு எந்த பொருள்களையும் மாணவர்கள் கொண்டு வர அனுமதிக்கப்படாது என்றும், அவ்வப்போது தேசிய தேர்வு முகமை இணையதளத்தை மாணவர்கள் பார்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது.

மத்திய பல்கலைக்கழகங்களில் 2025 ஆம் ஆண்டிற்கான முதுகலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் பொதுத் தேர்வை தேசிய தேர்வு முகமை அறிவித்து அதற்கான வழிகாட்டுதல்களையும் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு வயது வரம்பு எதுவும் இல்லை. கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப மாறுபடும் என்றும், பொதுப் பிரிவினர் ஒரு தாள் எழுத ரூ.800ம், இரண்டு தாள்கள் எழுத ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT