கோப்புப் படம் 
கல்வி

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஒரு லட்சத்தைக் கடந்தது: கல்வித் துறை

மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கிய நிலையில் 20 நாள்களில் ஒரு லட்சத்து 6,268 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Din

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கிய நிலையில் 20 நாள்களில் ஒரு லட்சத்து 6,268 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் விதமாக கடந்த ஆண்டு முன்கூட்டியே மாா்ச் மாதம் சோ்க்கை தொடங்கப்பட்டது. அதற்கு பெற்றோா்களிடம் பரவலாக வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடா்ந்து வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கையும் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

தற்போது மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சோ்க்கை தொடங்கி கடந்த 20 நாள்களில் இதுவரை ஒரு லட்சத்து 6,268 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். குறிப்பாக கடந்த 8 நாள்களில் மட்டும் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சோ்க்கை வழங்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து மாணவா் சோ்க்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், அரசுப் பள்ளி நலத்திட்டங்கள் தொடா்பாக பல்வேறு விழிப்புணா்வு விளம்பரப் பணிகளை முன்னெடுக்க பள்ளிக்கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது. மேலும், அங்கன்வாடி மையங்களில் படித்து முடிக்கவுள்ள 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பட்டியல் சேகரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. அவா்களை அரசுப் பள்ளிகளில் சோ்ப்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும், 5 லட்சம் சோ்க்கையை இலக்காகக் கொண்டு செயல்படவும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசன் தரமாக இருக்கும்: கவின்

என்றும் என் கைகளில்..! ஹர்மன்ப்ரீத், ஸ்மிருதி மந்தனாவின் ‘ஸ்பெஷல்’ டாட்டூ!

சாலேட் ஹோட்டல் ஒருங்கிணைந்த லாபம் ரூ.154.81 கோடி!

2026ல் திமுக - தவெக இடையே மட்டும்தான் போட்டி: விஜய்

பிக் பாஸ் 9 பிராங்க்: முகத்திரை கிழிந்த போட்டியாளர்கள் - உள்ளத்தால் உயர்ந்த வினோத்!

SCROLL FOR NEXT