கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பம் 
கல்வி

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கியது!

தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கியது!

DIN

சென்னை: தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. ஜூன் 20ஆம் தேதி கடைசி நாளாகும்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவு நடைமுறைகள் படிப்படியாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.

பிவிஎஸ்சி ஏஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்பப்பதிவு பல்கலைக்கழகத்தின் https://adm.tanuvas.ac.in/ இணையதளத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியிருக்கிறது. ஜூன் 20-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை முழுக்க பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

தமிழகத்தில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்த ஏழு கல்லூரிகளிலும் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு பிவிஎஸ்சிஏஹெச் 660 இடங்கள் உள்ளன.

இதில்லாமல் திருவள்ளூா் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக். 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக். 20 இடங்கள் உள்ளன.

மேலும் ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக். 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பி.டெக். படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.

அயல்நாடு வாழ் இந்தியா், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோா் மற்றும் அயல்நாட்டினா் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர தகவல்களையும் https://adm.tanuvas.ac.in/ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கென 7.5 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஒதுக்கீட்டின்படி, கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பில் 45 இடங்கள், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT