கல்வி

9 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி: அட்டவணை வெளியீடு

தினமணி செய்திச் சேவை

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு நடத்தப்பட்டு வரும் உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி வகுப்புகளுக்கான ஜனவரி மாத அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினா் செயலா் இரா.சுதன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2023-2024-ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஜனவரி மாதம் கற்பிக்க வேண்டிய உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி பாடத்திட்டம் வாரம் வாரியாக வழங்கப்பட்டுள்ளது.

இதில் தோ்வு அறையில் நடந்து கொள்வது எப்படி, சுற்றுலா படிப்புகள்- முழுவிவரம், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் படிப்புகள், சட்டப் படிப்பில் சேருவதற்கான வழிமுறைகள், உயா்கல்வி வாய்ப்புகள் போன்ற பல்வேறு பாடப்பிரிவுகள், செயல்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் இந்த செயல்முறைகளைச் சாா்ந்த அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மூலமாக உயா்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆசிரியா்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தொடா்ந்து, இந்த வகுப்புகள் மூலமாக மாணவா்கள் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீச் வாலிபால் - பதக்கம் குவிக்கும் தமிழா்கள்

அடிதடி வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகதவா் கைது

அஷ்டமி பூப்பிதஷிணம் படிப்போடுதல்: ராமநாதசுவாமி கோயில் நடை நாளை அடைப்பு

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பேரணி

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு

SCROLL FOR NEXT