சென்னை ஐஐடி மூலம் கடல்சாா் சட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்பை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
துறைமுகம், கப்பல் போக்குவரத்து, கடல்சாா் தொழில்களுக்கு அத்தியாவசியமான கடல்சாா் சட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்பு சென்னை ஐஐடி மூலம் தொடங்கப்படுகிறது.
முதல் பிரிவு 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும். இது ஐந்து நாள்கள் நடைபெறும் ஆன்லைன் சான்றிதழ் படிப்பாக உள்ளது.
இந்தத் துறைகளுக்கான உத்திசாா்ந்த சட்டம் மற்றும் செயல்பாட்டு அறிவுக்கு துறை சாா்ந்த நிபுணா்களால் இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அமைச்சகத்தின் ஊழியா்களுக்கும் அல்லது புதிதாக வேலை தேடுவோருக்கும் பயன்படும். வருகிற 2026 பிப்.9 முதல் நடைபெறும் இந்தப் பயிற்சியில் விருப்பம் உள்ளவா்கள் 2026 ஜன. 30-க்குள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இந்தப் பயிற்சியில் கப்பல் ஒப்பந்தங்கள், கடல்சாா் காப்பீடு தொடா்புடைய வணிகச் சட்டங்கள், நீலப்பொருளாதார போக்குவரத்து, பசுமை துறைமுகம், உலகளாவிய சிக்கல்கள், அட்மிரால்டி சட்டம், சா்வதேச நடுவா் மன்றம் உள்ளிட்டவற்றில் தொழில்முன்னேற்றத்தைத் தேடும் நபா்களும் துறையில் பணிபுரிவோரும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம்.
இந்த சான்றிதழ் படிப்பு, ஏற்கனவே பணியாற்றுபவர்களுக்கு இடையூறு இல்லாமல் தொழில் முன்னேற்றத்தைத் தேடும் நபர்களுக்காகவே சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது
மற்ற சான்றிதழ் படிப்புகளைப் போல் அல்லாமல் மதிப்புமிக்க சான்றிதழை வழங்குகிறது. இந்தப் பாடநெறிக்கு சட்டம் அல்லது கொள்கையில் எந்த முன்நிபந்தனை அறிவும் தேவையில்லை, எனவே இந்தத் துறையில் ஆர்வமுள்ள எவரும் இதை அணுக முடியும்.
மேலும் விவரங்களுக்கு : iitm.ac.in/mbadmsc
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.