முகப்பு
செய்திகள் / கட்டுரைகள்

கல்விக் கொள்கையில் கூட்டு முயற்சி தேவை

கல்விக் கொள்கையில் கூட்டு முயற்சி தேவை என்பது பற்றி..

Updated On : 21 மே 2026, 11:00 am IST
கல்வி - படம் | ens
பகிர்:

தேசிய கல்வி கொள்கை 2020 சுதந்திரத்திற்குப் பிறகு வரையப்பட்ட இந்தியாவின் மூன்றாவது கல்விக் கொள்கை ஆகும். டாக்டர் ராதாகிருஷ்ணன் கமிஷன் (1948-49) உயர்கல்வியிலும், கோத்தாரி கமிஷன் அறிக்கை (1965) பொதுக் கல்வியிலும் கவனம் செலுத்தியிருந்தது. 1968-இல் வரையப்பட்ட முதல் தேசிய கல்விக் கொள்கையின் போது கல்வி மத்திய பட்டியலில் இருந்தது. 1976 இல் செய்யப்பட்ட 46-ஆவது அரசமைப்புத் திருத்தம் கல்வியை பொது பட்டியலில் சேர்த்தது. அதன் பிறகு இரண்டாவது கல்விக்கொள்கை 1986-இல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 1992 -இல் ஒரு செயல் திட்டம் வெளியிடப்பட்டது. பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்துரையாடிய பிறகு, கரோனா பெருந்தொற்று காலத்தில் 2020 -இல் தேசிய கல்வி கொள்கை 2020 வெளியிடப்பட்டது. உண்மையில், தேசிய கல்வி கொள்கை 2020, டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு அறிக்கை (2015) வடிவில் ஒத்திகை பார்க்கப்பட்டது. பின்னர் கஸ்தூரி ரங்கன் குழு இறுதியாக தேசிய கல்வி கொள்கை 2020-இன் அறிக்கையை உருவாக்கியது. இந்த மூன்று தேசிய கொள்கையிலும் சில பொது பிரச்சினைகள் உள்ளன. பரந்த தேவைகள் நாட்டில் இருப்பதால் பல பொதுவான சிக்கல்கள் உள்ளன. இந்த சிக்கலான நிலையில்தான், கல்வியை பொதுப்பட்டியலில் சேர்க்கும் பிரச்சினையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுப்பட்டியல் குறித்த கொள்கைகள் விஷயத்தில், அரசியலைத் தவிர்த்துவிட்டு மாணவர்களின் எதிர்காலம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டையும் உள்ளடக்கிய சில வெற்றிக்கு வித்திடும் தீர்வுகளில் கவனம் செலுத்துவது அவசியமானது. சுகாதாரம் (மாநில பட்டியல்) மற்றும் கல்வி (பொது பட்டியல்) ஆகியவை எந்தவொரு அரசாங்கத்தின் மிக முக்கியமான இரண்டு சமூக உள்கட்டமைப்பு விஷயங்கள் ஆகும். சுகாதாரம் நீண்ட ஆயுளை உறுதி செய்யும் அதே வேளையில், கல்வி பொருளாதார செழிப்பை உறுதி செய்கிறது. இவை இரண்டும் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்கிறது. சுகாதாரம் மாநில பட்டியலில் உள்ளது என்றாலும், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் பல மருத்துவமனைகள் மற்றும் திட்டங்கள் உள்ளன. அவை மத்திய பட்ஜெட் மற்றும் பிற நிதி வடிவங்களில் இருந்து நிர்வகிக்கப்படுகின்றன. பொதுப் பட்டியலில் உள்ள கல்வி ஒரு சுவாரஸ்யமான கலவையைக் கொண்டுள்ளது. இதில் பல சிக்கல்கள் இருந்தாலும், எனது கவனம் மூன்று விஷயங்களில் உள்ளது - பள்ளிகள், உயர்கல்வியில் சேர்க்கை மற்றும் உயர்கல்விக்குப் பிறகு பட்டப்படிப்பு. முதலில் பள்ளிக் கல்வியுடன் தொடங்குவோம்.

உயர்கல்வியுடன் ஒப்பிடும்போது பள்ளிக் கல்வியின் அளவு மிகப்பெரியது. இந்தியா முழுவதும் சுமார் 14.7 லட்சம் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 2.6 லட்சம் பள்ளிகள் நகர்ப்புறத்திலும் மீதமுள்ளவை கிராமப்புறத்திலும் உள்ளன. இவற்றில், சுமார் 75% அரசுப் பள்ளிகள் (70% அரசு நடத்தும் பள்ளிகள், 5% அரசு உதவி பெறும் பள்ளிகள்). இப்பள்ளிகள் அடிப்படை கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை சுமார் 24 கோடி மாணவர்களுக்கு கல்வியை வழங்குகின்றன. இதில் 1 கோடி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளிக் கல்வியில் மாநில அரசுகளின் பங்கு தனித்துவமானது. குறிப்பாக பள்ளிக் கல்வியை வளர்ப்பதற்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. மேலும் இதில் முன்னோடியாகவும் உள்ளது.

Advertisement

Advertisement

பெரும்பாலான பள்ளிகள் மாநில அரசுகளால் நடத்தப்படுகின்றன என்பதையும், அவற்றில் பெரும்பாலானவை கிராமப்புறங்களில் உள்ளன என்பதையும் கருத்தில் கொண்டு, மத்திய-மாநில உறவு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு இதை ஒரு வலுவான மத்திய-மாநில-பஞ்சாயத்து உறவாக மாற்ற பஞ்சாயத்துக்களையும் இதில் இணைத்துக் கொள்வது முக்கியம். மகாத்மா காந்தியின் 'கிராம சுயராஜ்ஜியத்தை' யதார்த்தமாக்க கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசின் கூடுதல் உதவி மற்றும் ஆதரவு அவசியமாகிறது.

அடுத்தது உயர்கல்வி நிறுவனங்களின் சேர்க்கை பற்றியது. மே முதல் ஜூலை மாதம் வரை, அரசு மற்றும் தனியார் என பல நுழைவுத் தேர்வுகளால் மாணவர்களை அதிகம் சோதிக்கும் பருவமாகும். அரசு நுழைவுத் தேர்வுகள் மத்திய மற்றும் சில மாநில அரசுகளால் நெறிப்படுத்தப்பட்ட முறையில் நடத்தப்படும். அதே வேளையில், தனியார் நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுகள் வருவாய் ஈட்டும் மாதிரியாக மாறி வருகின்றன. அது எப்படியிருந்தாலும், சஉஉப, ஒஉஉ, இமஉப போன்ற நுழைவுத் தேர்வுகளில் உள்ள சர்ச்சைக்குரிய பிரச்னை அனைத்து மாநில அரசுகளுக்கும் பொதுவானதாகும். சஉஉப அல்லது ஒஉஉ மிகவும் தேவையான வெளிப்படைத்தன்மையை வழங்குகிறது என்பதில் சந்தேகமில்லை. உயர்கல்வியின் முன்னேற்றத்தில் மாநிலங்களின் பங்கை சூழல் சார்ந்ததாக கருத வேண்டும். சேர்க்கை கொள்கையில் மாநிலங்களுக்கு சுதந்திரம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். பிரச்னை மருத்துவ சேர்க்கையில் தான், பொறியியல் சேர்க்கையில் அல்ல என்றாலும், வெற்றி சூத்திரம் இரண்டிற்கும் ஒரே மாதிரியாக உள்ளது. சஉஉப, ஒஉஉ போன்ற மத்திய தேர்வுகளை ஏற்றுக்கொண்டு, பன்னிரண்டாம் வகுப்பு மொத்த மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் கலவையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தாங்களாகவே சேர்க்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்தக் கலவையின் விகிதத்தை (டழ்ர்ல்ர்ழ்ற்ண்ர்ய்ஹற்ங் ஙண்ஷ்) மாநிலங்களே தீர்மானிக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களின் சேர்க்கைக்கும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டால், மாணவர்களுக்கான பல நுழைவுத் தேர்வுகளின் சுமையைக் குறைப்பது மட்டுமல்லாமல், பொது பட்டியல் நல்லிணக்கத்தின் உணர்வுடன் ஒத்துப்போகும் வகையில் நியாயமான முறையில் மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும். தேவைப்பட்டால், இதற்கு தேவையான சட்டத் திருத்தங்களைச் செய்யலாம்.

மூன்றாவது பிரச்சினை மாநிலங்களுக்கிடையேயும் மற்றும் மாநிலத்திற்குள்ளும் பட்டங்களின் சமநிலையாக்கம் குறித்தது. பல்கலைக்கழகங்கள் - மத்திய, மாநில, தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டத்தின் பிரிவு 22 இன் கீழ் பட்டங்களை வழங்க அதன் சட்டத்தால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளன. சில மாநில அரசுகள் தங்கள் பல்கலைக்கழகங்கள் அல்லாத பிற பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்களுக்கு சமமான பட்டங்களை (உவ்ன்ண்ஸ்ஹப்ங்ய்ஸ்ரீங்) வழங்குகின்றன. பட்டதாரிகளுக்குப் பயனளிப்பதைத் தாமதப்படுத்தும் இந்த செயல்முறை, அனைத்து வகையான பல்கலைக்கழகங்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒருமித்த கருத்து மூலம் தவிர்க்கப்படலாம். பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவிக்கப்பட்ட பெயரிடலுக்கு உட்பட்ட பட்டங்கள் (சர்ம்ங்ய்ஸ்ரீப்ஹற்ன்ழ்ங் ர்ச் ஈங்ஞ்ழ்ங்ங்ள்), மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் அனைத்து பட்டதாரிகளுக்கும் அனைத்து நோக்கங்களுக்காகவும் சமமானதாகக் கருதப்பட வேண்டும். இது பட்டதாரிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் மற்றும் பொது பட்டியல் நல்லிணக்கத்தின் உணர்வுடன் இது ஒத்துப்போகிறது.

முடிவாக, கல்வி பொதுப்பட்டியலில் வருவதால், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையே கல்விக் கொள்கைகளில் வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகளின் மத்தியில் தொடர்ந்து நீடிக்கும் பெரிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்பு அனைத்து பங்குதாரர்களும் தங்கள் முயற்சிகளை சிறிய கூட்டு கொள்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

summary

A collaborative effort is needed in education policy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.