வினா-விடை வங்கி

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 6

முந்தைய ஆண்டு வினாக்கள் வினா - விடை வங்கி...

இணையதளச் செய்திப் பிரிவு

1. கார்பன் மோனாக்ஸைடு உமிழ்வுகளைப் பற்றி கீழ்க்காணும் எந்தக் கூற்றுகள் சரி?

(1) சரிவர எரிக்காத எரிபொருளால் வரக்கூடியது.

(2) பெட்ரோல் எரிபொருள் வாகனங்களால் வருவது.

(3) நீண்ட நேர உமிழ்வினால் குமட்டல் ஏற்படுத்தும்.

(A) (1) மற்றும் (2) மட்டும்

(B) (2) மற்றும் (3) மட்டும்

(C) (1) (2) மற்றும் (3)

(D) (1) மற்றும் (3)

2. நார்டிக்ஸ் குறித்த பின்வரும் கூற்றுகளில் உண்மையான கூற்று எது?

(i) இந்தோ ஆரியர்கள் இந்தியாவில் கடைசியாக குடியேறியவர்கள்.

(ii) நெக்ரிட்டோகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்த குழு இந்தக் குழு.

(iii) இந்தக் குழு 2000 மற்றும் 1500 BC க்கு இடையில் இந்தியாவிற்கு வந்தனர்.

(A) (i) மட்டும்

(B) (i) மற்றும் (iii) மட்டும்

(C) (i) மற்றும் (ii) மட்டும்

(D) (ii) மற்றும் (iii) மட்டும்

3. மால்வா பீடபூமி பற்றிய சரியான கூற்றினை/கூற்றுகளைத் தேர்வு செய்க :

(1) சராசரியாக 600 மீட்டர் உயரத்துடன் கிழக்கு நோக்கி சரிந்துள்ளது.

(2) பீடபூமியின் பெரும்பாலான பகுதிகளில் சம்பல் மற்றும் அதன் துணை ஆறுகள் பாய்கின்றது.

(3) மால்வா பீடபூமி ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது.

(A) (1) மட்டும் சரியானது

(B) (1) மற்றும் (3) சரியானவை

(C) (2) மற்றும் (3) சரியானவை

(D) (1) மற்றும் (2) சரியானவை

4. கீழே கொடுக்கப்பட்ட கூற்று/கூற்றுகளில் எது/எவை சரியானவை?

(i) சதகர்ணி சாதவாகன மன்னர்களில் முதல் அரசர் மற்றும் முதல் சக்தி வாய்ந்த சாதவாகன ஆட்சியாளர் அல்ல.

(ii) அவருடைய சாதனைகள் மனாகாட் கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை.

(iii) சாஞ்சி ஸ்தூபியின் நுழைவாயில்கள் ஒன்றில் அவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது மற்றும் "தட்சிணபாதத்தின் இறைவன்" என்று குறிப்பிடப்படுகிறது.

(A) (iii) மட்டும்

(B) (ii) மற்றும் (iii) மட்டும்

(C) (i) மட்டும்

(D) (i) மற்றும் (ii) மட்டும்

5. காரணம் மற்றும் கூற்று

கூற்று [A] :

அரசியல் தலைவர் என்பதைத் தவிர, கோபால கிருஷ்ண கோகலே ஒரு சிறந்த சமூகச் சீர்திருத்தவாதி.

காரணம் [R] :

இவர் 'இந்திய சமுதாயத்தின் சேவகர்கள்' என்னும் தனித்தன்மை வாய்ந்த அமைப்பை நிறுவியவர்.

(A) கூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு

(B) கூற்று [A] தவறு ஆனால் காரணம் [R] சரி

(C) இரண்டும் கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி

(D) இரண்டும் கூற்று [A] மற்றும் காரணம் (R) தவறு

6. பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி அடுக்குக

(1) வகுப்புவாதத் தீர்வு

(2) காந்தி -இர்வின் உடன்படிக்கை

(3) சிட்டகாங்க் வெடிப்பு

(4) பூனா ஒப்பந்தம்

(A) (1), (2), (3), (4)

(B) (2), (3), (4), (1)

(C) (3), (2), (1), (4)

(D) (4), (3), (2), (1)

7. பின்வருவனவற்றுள் இந்திய தேசியக் காங்கிரஸ் பற்றிய சரியான கூற்று/கூற்றுகளைத் தேர்வு செய்க:

(i) இந்திய தேசியக் காங்கிரஸின் தந்தை A.O. ஹியூம் ஆவார்.

(ii) இந்திய தேசியக் காங்கிரஸின் முதல் தலைவர் S.N. பானர்ஜி ஆவார்.

(iii) S.N.பானர்ஜி இந்திய தேசிய விடுதலை அமைப்பை நிறுவினார்.

(A) (i) மட்டும்

(B) (i) மற்றும் (iii) மட்டும்

(C) (i) மற்றும் (ii) மட்டும்

(D) (ii) மற்றும் (iii) மட்டும்

8. கீழ்க்கண்டவற்றைச் சரியாகப் பொருத்துக:

புகழ்பெற்ற இடம் பகுதி

(1) புத்தகயா - பகல்கண்ட்

(2) கஜுராகோ - பண்டல்கண்ட்

(3) ஷீர்டி - விதர்பா

(4) நாசிக் - மால்வா

(5) திருப்பதி - இராயலசீமா

கீழ்கண்டவற்றுள் எவை சரியாக பொருந்துகின்றன

(A) (1), (2) மற்றும் (4) மட்டும் சரி

(B) (2), (3), (4) மற்றும் (5) மட்டும் சரி

(C) (2) மற்றும் (5) மட்டும் சரி

(D) (1) (3) (4) (5)

9. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் அடிப்படைக் கடமைகளானது இந்திய அரசமைப்பில் சேர்க்கப்பட்டது.

(A) 42-வது அரசியலமைப்புத் திருத்தம் 1976

(B) 43-வது அரசியலமைப்புத் திருத்தம் 1977

(C) 44-வது அரசியலமைப்புத் திருத்தம் 1978

(D) 45-வது அரசியலமைப்புத் திருத்தம் 1980

10. இந்தியக் குடியரசுத் தலைவர் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் தவறான கூற்றை அடையாளம் காண்க.

(A) குடியரசுத் தலைவர் பதவியில் இருக்கும் போது எப்பொழுது வேண்டுமென்றாலும் அவர் பதவி விலகலாம்

(B) ஐந்தாண்டுகள் கடந்த பிறகும், குடியரசுத் தலைவர் பதவியில் நீடிக்க இயலாது

(C) குற்றச்சாட்டு (Impeachment) வாயிலாகக் குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்யலாம்

(D) இது வரை எந்த ஒரு குடியரசுத் தலைவரும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை

11. கீழ்க்கண்ட தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1994 தொடர்பானவற்றுள் சரியானது எவை?

(i) இச்சட்டத்தின் இரண்டாம் அத்தியாயம் கிராம சபை தொடர்பானது ஆகும்.

(ii) இதன் ஏழாம் அத்தியாயம் வரி விதிப்பு மற்றும் நிதி தொடர்பானது ஆகும்.

(iii) இதன் பன்னிரண்டாவது அத்தியாயம் அபராதங்கள் தொடர்பானது ஆகும்.

(A) (i) மட்டும்

(B) (i) மற்றும் (iii) மட்டும்

(C) (i) மற்றும் (ii) மட்டும்

(D) (ii) மற்றும் (iii) மட்டும்

12. கீழேகொடுக்கப்பட்டுள்ள பட்டியல் I மற்றும் II -இல் உள்ளவற்றை சரியாக பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

சரத்துகள் குழுக்கள்

(a) சட்டப்பிரிவு 280 1. மாநிலங்களுக்கிடையிலான குழு

(b) சட்டப்பிரிவு 263 2.மாநிலங்களுக்கிடையிலான

நதிநீர்தகராறு தீர்ப்பாயம்

(c) சட்டப்பிரிவு 262 3. பொருட்கள் மற்றும் சேவை வரிக் குழு

(d) சட்டப்பிரிவு 279 A 4. நிதிக்குழு

(a) (b) (c) (d)

(A) 4 3 2 1

(B) 4 1 2 3

(C) 3 4 1 2

(D) 1 4 3 2

13. தவறான இணையை கண்டுபிடி :

ஆணையம்/அமைப்பு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

(1) தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993

(2) மத்திய தகவல் ஆணையம் 2005

(3) மத்தியக் கண்காணிப்பு ஆணையம் 1963

(4) மத்தியப் புலனாய்வு அமைப்பு 1969

(A) (2) மற்றும் (3) மட்டும்

(B) (1) மற்றும் (2) மட்டும்

(C) (3) மற்றும் (4) மட்டும்

(D) (2) மற்றும் (4) மட்டும்

14. சரியான விடையை பொருத்துக:

சட்டங்கள் ஆண்டு

(a) தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1. 1969

(b) நுகர்வோர் இயக்கம் 2. 1988

(c) தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 3. 1986

(d) ஏகபோக மற்றும் கட்டுப்பாட்டு

வர்த்தக நடைமுறைகள் சட்டம் 4. 1974

(a) (b) (c) (d)

(A) 3 4 2 1

(B) 4 3 1 2

(C) 2 1 3 4

(D) 3 1 2 4

15. தமிழக அரசு ஏப்ரல் 29 முதல் மே 5 ஆம் தேதி வரை இவருடைய பிறந்த நாளை கொண்டாடியது

(A) பாவேந்தர் பாரதிதாசன்

(B) பெருந்தலைவர் காமராஜர்

(C) பசும்பொன் முத்துராமலிங்கனார்

(D) பேரறிஞர் அண்ணா

16. செப்டம்பர் 20, 2023 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள் எவை?

(i) இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் உள்ள அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு 33% ஒதுக்குகிறது.

(ii) லோக் சபா மற்றும் மாநில சட்டமன்றங்களில் SC/ST க்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு இது பொருந்தாது.

(iii) 25 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

(iv) தொகுதி மறுவரையறைப் பயிற்சிக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்.

(A) (i) மற்றும் (ii) மட்டும்

(B) (i) மற்றும் (iv) மட்டும்

(C) (ii) மற்றும் (iii) மட்டும்

(D) (i) மற்றும் (iii) மட்டும்

17. பெண்களின் நலனுக்காக தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்தியது. பின்வருவனவற்றில் எந்த காரணம் இந்தத் திட்டத்திற்கான நியாயமான விளக்கம்.

(i) உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2023 இன் படி ஆண்டு வருமானத்தில் பாலின வேறுபாடு

(ii) பெண்களின் ஏழ்மையான சமூக நிலையை மாற்ற

(iii) கிராமப்புறப் பெண்களின் மேம்பாடு

(iv) பெண்களின் எண்ணற்ற மணிநேர அமைதியான உழைப்பை அங்கீகரித்தல்

(A) (i) மற்றும் (iii) மட்டும்

(B) (ii) மற்றும் (iv) மட்டும்

(C) (i) மற்றும் (ii) மட்டும்

(D) (i) மற்றும் (iv) மட்டும்

18. சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்யவும் :

(1) NHS - தேசிய சுகாதார சேவை

(2) CBHI - சுகாதாரக் காப்பீட்டுக்கான மத்தியப் பணியகம்

(3) PHC - ஆரம்ப சுகாதார நிலையம்

(4) NRHM - தேசிய சுகாதார சேவை மையம்

(A) (1) மற்றும் (3) சரியானவை

(B) (1) மற்றும் (2) சரியானவை

(C) (2) மற்றும் (3) சரியானவை

(D) (3) மற்றும் (4) சரியானவை

19. தேசிய விவசாயச் சந்தை (e-NAM) இணைய முகப்பின் நோக்கம்.

(i) விவசாயப் பொருட்களுக்கு, ஒரு ஒருங்கிணைந்த தேசிய மெய்நிகர் சந்தையை உருவாக்குவது

(ii) சிறந்த விலையைப் பெறுவதற்கு விவசாயிகளுக்கு உதவுதல்

(iii) விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் வழிகளை வழங்குதல்

(A) (i) மற்றும் (ii) மட்டும்

(B) (ii) மற்றும் (iii) மட்டும்

(C) (i) மற்றும் (iii) மட்டும்

(D) (i), (ii) மற்றும் (iii)

20. கூற்று [A]: தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது.

காரணம் [R]: தமிழ்நாடு அரசு தமிழ்நாடு கிராம வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் என்ற முதன்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

(A) [A] சரி மற்றும் (R) தவறு

(B) [A] மற்றும் (R] இரண்டுமே சரி மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்

(C) [A] தவறு; [R] சரி

(D) [A] மற்றும் (R] இரண்டுமே சரி ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் இல்லை என்பது சரி

21. தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் குறிக்கோள் அல்லது குறிக்கோள்கள்

(i) பொருளாதாரச் சுதந்திரம் மூலமாக மகளிர் மேம்பாடு அடையச் செய்வது

(ii) நாடு முழுவதும் உள்ள இளைஞர்களைத் திறன் மேம்பாடு அடையப் பயிற்சித் திட்டங்களை அளிப்பது

(iii) திறன் மேம்பாட்டுச் சான்றிதழ் பெற்றவர்களுக்கு பண விருதுகள் வழங்கி வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல்

(iv) நாட்டின் உழைப்பாளர்களின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துதல்

(A) (i), (ii) மற்றும் (iii)

(B) (ii), (iii) மற்றும் (iv)

(C) (i) மற்றும் (ii) மட்டும்

(D) (i) மட்டும்

22. பின்வருவனவற்றை அவற்றின் திட்டங்களுடன் பொருத்தவும்:

(a) மதி பஜார் 1. சுத்தமான எரிசக்தி

(b) பசுமை வீடுகள் திட்டம் 2. திறன் மேம்பாடு'

(c) நான் முதல்வன் 3. வறுமை ஒழிப்பு

(d) அஜீவிகா 4. சுய உதவிக்குழு

(a) (b) (c) (d)

(A) 3 1 2 4

(B) 4 1 2 3

(C) 1 3 2 4

(D) 4 3 1 2

23. நம்மைக் காக்கும்-48 திட்டத்தின் கீழ், விபத்து நடைபெற்ற முதல் 48 மணி நேரத்திற்குள் பணமில்லா சிகிச்சைக்கான உச்சவரம்பு ஒரு நபருக்கு ரூ._____ ஆகும்.

(A) 1.00 லட்சம்

(B) 2.00 லட்சம்

(C) 2.50 லட்சம்

(D) 3.00 லட்சம்

24. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 2022ஆம் வருடம் முதல் அதன் சொந்த புதிய பிரத்யேக வளாகத்தில் செயல்பட்டு வரும் இடம்

(A) சேப்பாக்கம்

(B) மைசூர்

(C) கிளாம்பாக்கம்

(D) பெரும்பாக்கம்

25. தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME கள்) பற்றி பின்வரும் கூற்றுகளில் எது சரியானவை?

(i) உத்யம் பதிவுகளில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

(ii) மாநிலத்தின் 30% தொழில்முனைவோர் பெண்கள்.

(iii) கோயம்புத்தூரில் தான் மாநிலத்திலேயே அதிக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன.

(A) (i) மட்டும்

(B) (ii) மற்றும் (iii) மட்டுமே

(C) (i) மற்றும் (ii) மட்டுமே

(D) (i) மற்றும் (iii) மட்டுமே

விடைகள்

1. (C) (1) (2) மற்றும் (3)

2. (B) (i) மற்றும் (iii) மட்டும்

3. (C) (2) மற்றும் (3) சரியானவை

4. (A) (iii) மட்டும்

5. (C) இரண்டும் கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி

6. (C) (3), (2), (1), (4)

7. (B) (i) மற்றும் (iii) மட்டும்

8. (C) (2) மற்றும் (5) மட்டும் சரி

9. (A) 42-வது அரசியலமைப்புத் திருத்தம் 1976

10. (B) ஐந்தாண்டுகள் கடந்த பிறகும், குடியரசுத் தலைவர் பதவியில் நீடிக்க இயலாது

11. (B) (i) மற்றும் (iii) மட்டும்

12. (B) 4 1 2 3

13. (C) (3) மற்றும் (4) மட்டும்

14. (A) 3 4 2 1

15. (A) பாவேந்தர் பாரதிதாசன்

16. (B) (i) மற்றும் (iv) மட்டும்

17. (D) (i) மற்றும் (iv) மட்டும்

18. (A) (1) மற்றும் (3) சரியானவை

19. (D) (i), (ii) மற்றும் (iii)

20. (B) [A] மற்றும் (R] இரண்டுமே சரி மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்

21. (B) (ii), (iii) மற்றும் (iv)

22. (B) 4 1 2 3

23. (B) 2.00 லட்சம்

24. (D) பெரும்பாக்கம்

25. (C) (i) மற்றும் (ii) மட்டுமே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சாக்கலேட் சீசன்... பிரகிருதி பாவனி!

கண்களால் கைது செய்... யாஷிகா ஆனந்த்!

திரை விலகும் தருணம்... நிக்கி தம்போலி!

தாமரை பூத்த தடாகத்திலே... ராஷ்மி கௌதம்!

சின்னவளே முகம் சிவந்தவளே... பலக் திவாரி!

SCROLL FOR NEXT