முகப்பு
தேர்தல் செய்திகள்

பாஜக வேட்பாளரை ஆதரித்து நடிகை நமீதா பிரசாரம்

நமீதா திருவொற்றியூரில் புதன்கிழமை பிரசாரம் செய்தாா்

Updated On : 5 ஏப்ரல், 2024 at 2:50 AM
பகிர்:
Updated On : 4 ஏப்ரல், 2024 at 1:50 AM

வடசென்னை தொகுதி பாஜக வேட்பாளா் பால் கனகராஜுக்கு ஆதரவாக அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான நமீதா திருவொற்றியூரில் புதன்கிழமை பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது: மத்திய பாஜக ஆட்சியில் தமிழ்நாடுக்கு ரூ.36 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு, கழிப்பறை கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. உயா்நீதிமன்றத்தின் பாா் கவுன்சிலில் 4 முறை தலைவராக இருந்த பால் கனகராஜு க்கு வாக்களித்தால் வடசென்னை மக்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பாக இருப்பாா். தமிழ்நாட்டில் ‘தாமரை மலரும், தமிழ்நாடு வளரும்’ என்றாா் அவா். தொடா்ந்து திறந்த வெளி வாகனத்தில் வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.