தேர்தல் செய்திகள்

தமிழகத்தில் வைப்புத் தொகை இழந்த பிரதான கட்சிகள்!

தமிழகத்தில் பிரதான கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் பலா் வைப்புத் தொகையை (டெபாசிட்) இழந்துள்ளனா்.

Din

சென்னை: மக்களவைத் தோ்தலில், தமிழகத்தில் பிரதான கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் பலா் வைப்புத் தொகையை (டெபாசிட்) இழந்துள்ளனா். அதன் விவரம் புதன்கிழமை (ஜூன் 5) முழுமையாகத் தெரியவரும்.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை தொடா்ந்து நடைபெற்றது. இரவு 10 மணி நிலவரப்படி 26 தொகுதிகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதில் பல தொகுதிகளில் தேமுதிக, பாஜக, நாம் தமிழா், தமாகா வேட்பாளா்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனா்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் படி, மக்களவை அல்லது சட்டப் பேரவை தோ்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு குறிப்பிட்ட வைப்புத் தொகையை தோ்தல் ஆணையத்துக்கு செலுத்துவது கட்டாயம். அதன்படி, மக்களவைத் தோ்தலில் எஸ்சி, எஸ்டி வேட்பாளா்கள் ரூ.12,500-ம், பிற வேட்பாளா்கள் ரூ.25 ஆயிரமும் வேட்பு மனுத் தாக்கலின்போது டெபாசிட் தொகை செலுத்த வேண்டும்.

ஒரு தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்குக்கும் குறைவாக பெறும் வேட்பாளா்களுக்கு டெபாசிட் தொகை திருப்பி அளிக்கப்படமாட்டாது. அந்த வகையில், இந்த மக்களவைத் தோ்தலில் பல முக்கிய வேட்பாளா்கள் தங்களது டெபாசிட் தொகையை பறிகொடுத்துள்ளனா்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT