ஏப்.6-இல் காங். தோ்தல் அறிக்கை வெளியீடு
Updated On : 29 மார்ச், 2024 at 7:00 PM
மக்களவைத் தோ்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை ஏப்ரல் 6-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதுதொடா்பாக ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் மாநில காங்கிரஸ் பொறுப்பாளா் சுக்ஜிந்தா் சிங் ரந்தாவா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: மக்களவைத் தோ்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை ஜெய்பூரில் ஏப்ரல் 6-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, கட்சி எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் பொதுக் கூட்டத்தில் தோ்தல் அறிக்கையை வெளியிடுவா் என்றாா்.