மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசியவை...
பிரதமர் நரேந்திர மோடி கோவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்வில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பேரவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் சிறப்புரை ஆற்ற உள்ளார்.
Advertisement
இந்நிகழ்வில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உட்பட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள், உட்பட கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதற்காக பிரம்மாண்ட மேடை மற்றும் சுமார் 5 லட்சம் பேர் அமரும் விதமாக மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் பேசிய பிரதமர் மோடி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை திமுக - காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெறுப்பரசியலுக்கு இரையாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவர்கள் கீழ்த்தரமான அரசியல் செய்து நமது வீட்டுப் பெண்களுக்குக் கிடைக்கவிருந்த இடஒதுக்கீட்டை பறித்துக்கொண்டதாகவும் அவர் பேசினார்.