பவள விழா, பல்லாங்குழி பாப்பாக்களை தூக்கி எறியுங்கள்! விஜய்
சென்னையில் பிரசாரத்தை நிறைவு செய்து விஜய் பேச்சு...
75 ஆண்டுகள் பழைய பவள விழாப் பாப்பாவையும், 55 ஆண்டுகள் பல்லாங்குழிப் பாப்பாவையும் தூக்கி எறியுங்கள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்து தவெக தலைவர் விஜய், கட்சித் தொண்டர்களிடையே சென்னை நந்தனம் திடலில் இன்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
Advertisement
“புதுச்சேரியில் 90 சதவிகிதத்துக்கு மேல் வாக்குப்பதிவாகியுள்ளது. அதே மாதிரி தமிழ்நாட்டிலும் நடக்கிறதா? இல்லையா? என்று பாருங்கள். வாக்குச் சாவடிக்குச் சென்று ஸ்டாலினிடம் இருந்து நமது தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.
10 முறை தோற்ற அனுபவசாலியே, சேலம் பக்கத்தில் இருக்கும் தொகுதியில் பதுங்கிக் கொள்ளாமல் வெளியே வந்து வேறிடத்தில் போட்டியிட்டு உங்களால் வெற்றிபெற முடியுமா? முதலில் நிற்க முடியுமா? அதை செய்துவிட்டு என்னைப் பற்றி பேசுங்கள். சொந்த தொகுதியிலேயே தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் தவெக சின்னத்தை திருடியவர் தானே. எடப்பாடியில் சுயேச்சையாக நிற்கும் டிவி சின்னத்துக்கு வாக்களியுங்கள்.
ஊழலில் ஊறிப் போன இருவரும் வேண்டாம். மாற்றத்துக்கான தேர்தலில் தவெகவைக் கொண்டு வாருங்கள்.
போகிப் பண்டிகை அன்று வீணாகப் போனதை தூக்கி வீசுவது போன்று, 75 ஆண்டுகள் பழைய பவள விழாப் பாப்பாவையும், 55 ஆண்டுகள் பல்லாங்குழிப் பாப்பாவையும் தூக்கி வீசி எறியுங்கள். புதிய ஆட்சியைக் கொண்டு வாருங்கள்.
திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம். அனைவரும் ஒரே கூட்டணியில் இருந்து ஒருவனை மட்டுமே எதிர்க்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.