திமுக தான் முதலிடம்; இரண்டாவது இடத்துக்குத் தான் போட்டி: அமைச்சர் எஸ். ரகுபதி
ஜனநாயகக் கடமையை ஆற்றிய அமைச்சர் எஸ். ரகுபதி..
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் எஸ். ரகுபதி தனது வாக்கினைப் பதிவு செய்து ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார்.
புதுக்கோட்டை நகரிலுள்ள ராணியார் உயர்நிலைப் பள்ளியில் வாக்களித்துவிட்டு அவர் அளித்த பேட்டியில்,
தேர்தல் ஆணையம் ஒரு கட்சியுடைய கூட்டணியாகவே செயல்பட்டு வருகிறது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். எங்களுக்குக் களம் நன்றாக இருக்கிறது. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும். இளம் வாக்காளர்களைக் கவரும் வகையில் நாங்கள் அவர்களை நாடி பிரசாரம் மேற்கொண்டுள்ளோம். என்னென்ன நன்மைகள் எல்லாம் செய்தோம் என்று சொல்லி உள்ளோம்.
Advertisement
Advertisement
எம்ஜிஆர் என்பது வேறு; தற்போதுள்ள நடிகர் என்பது வேறு என்பதை வித்தியாசப்படுத்தியுள்ளோம். எம்ஜிஆர் திமுக உறுப்பினராக இருந்து - எம்எல்சி ஆக இருந்து அந்த இயக்கத்தின் பொருளாளராக இருந்து அதற்குப் பிறகு பிரச்னை ஏற்பட்டு தனிக்கட்சி ஆரம்பித்தார். எம்ஜிஆர் மன்றங்கள் தேர்தல் களத்தில் 1957ல் இருந்து பணியாற்றி இருக்கின்றன. எம்ஜிஆர் மன்றம் என்பது அனுபவம் உள்ளவை. 1962, 1967, 1971 வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவை. ஆனால், தற்போது இது புதிய ரசிகர்கள் கூட்டம் தானே தவிர எந்த ஒரு அனுபவமும் இல்லாதவர்கள். எம்ஜிஆர் மன்றங்கள் அடிப்படையிலேயே அரசியல் ரீதியாக வளர்க்கப்பட்டவை. அதனால் தான் வெற்றி பெற முடிந்தது.
சுகவாசிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கேரவனிலிருந்து அரை மணி நேரம் வெளியே வந்துவிட்டு இண்டு மணி நேரம் வெயிலில் நிற்கக்கூட முடியாத ஒருவர் மக்களுக்காக களப்பணி ஆற்றுவார் என்று எண்ணுவது தவறான ஒன்று. எங்களது முதல்வர் களப்பணியில் சிறந்தவர். களப்பணி ஆற்றக்கூடிய வல்லவர். அதுபோல் உதயநிதி ஸ்டாலினும் களப்பணி ஆற்றக் கூடியவர். அதிகமான களப்பணி ஆற்றக் கூடியவர்கள் தான் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ளவர்கள்.
எடப்பாடி பழனிச்சாமியைப் பொருத்தவரை அவர் செல்வாக்கை என்றைக்கோ இழந்துவிட்டார். பத்து தேர்தலில் தோல்வியை சந்தித்து விட்டார். பதினோராவது தோல்வியைச் சந்திக்கத் தயாராக இருக்கிறார். அக்னி நட்சத்திரத்துடைய சூட்டையும் தாங்கி மக்கள் வாழ முடியும் என்பதை நிரூபிக்கின்ற நாள்தான் (மே 4) அக்னி நட்சத்திரம். அக்னி நட்சத்திர வெப்பம் என்பது மக்களைப் பாதித்ததாக வரலாறு கிடையாது. அக்னி நட்சத்திரம் சூரிய வெப்பத்தால் இறந்ததாகவோ கஷ்டப்பட்டதாகவோ வரலாறு கிடையாது.
அக்னி நட்சத்திரமாக இருந்தாலும் எந்த நட்சத்திரமாக இருந்தாலும் அது எங்களது முதல்வர் ஸ்டாலின் நட்சத்திரம் தான் நாங்கள் வெற்றி பெறுவோம். களத்தைப் பொறுத்தவரை முதல் இடத்தில் நாங்கள் இருக்கின்றோம். இரண்டாவது இடத்திற்குத் தான் போட்டியே. இரண்டாவது இடத்தில் யார் வேண்டுமானாலும் வந்து விட்டுப் போகட்டும் என்றார்.
As the Tamil Nadu Legislative Assembly election is underway, having commenced this morning, Minister S. Regupathy has cast his vote and fulfilled his democratic duty.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.