முகப்பு
தமிழ்நாடு

70 ஆண்டு 'சென்டிமென்ட்'!

70 ஆண்டு 'சென்டிமென்ட்'!

Updated On : 21 மார்ச், 2026 at 10:23 PM
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலை.
பகிர்:

தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் சுமார் 70 ஆண்டுகளாக நிலவும் 'சென்டிமென்ட்' கட்சியினரிடையே கலக்கத்தையும், எதிர்பார்ப்பை யும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற 15 பேரவைத் தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறை, யும், சுயேச்சை (1957) ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.

1971 முதல் 2011 வரை நடைபெற்ற 10 தேர்தல்களில் இந்தத் தொகுதியில் வெற்றிபெறும் கட்சியே ஆட்சியைத் தக்கவைத்து வந்தது. 40 ஆண்டுகளாக தொடர்ந்த இந்த வரலாறு 2016-ஆம் ஆண்டு தேர்தலில் மாறிப்போனது. அப்போது. தனிப்பெரும்பான்மை பலத்துடன் அதிமுக ஆட்சியமைத்தபோது. இங்கு திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆஸ்டின் வெற்றி பெற்றார். அதேபோல 2021-இல் திமுக ஆட்சியமைத்தபோது, இங்கு அதிமுக வேட்பாளர் என். தளவாய்சுந்தரம் வெற்றிபெற்றார்.

இது ஒருபுறமிருக்க, கன்னியாகுமரி தொகுதியில் ஒருமுறை வெற்றிபெற்றவர், தொடர்ந்து அடுத்த தேர்தலில் வென்றதில்லை என்ற 'சென்டிமென்ட்’ 69 ஆண்டுகளாகத் தொடர்கிறது. இந்த முறை மாறுமா?...

மே 4-இல் பதில் கிடைக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.