நாளை மாலை வெளியாகிறது திமுக தேர்தல் அறிக்கை!
நாளை மாலை திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாளை(ஞாயிற்றுக்கிழமை) திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தோ்தலில் களம் காண்கின்றன.
Advertisement
Advertisement
இவை தவிர நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளும் தோ்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் - 28, மதிமுக - 4, மமக - 2, கொமதேக - 2, ஐயூஎம்எல் - 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 5 , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள் 8, தேமுதிக 10 தொகுதிகளிலும் களம்காண்கின்றன.
இந்த நிலையில் 164 பேர் அடங்கிய திமுக வேட்பாளர்களின் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அரசியல் கூட்டணி மட்டுமல்ல கொள்கை கூட்டணி. 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது. 70 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம்.
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னமும், 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் சின்னமும் போட்டியிடுகின்றன. நாளை மாலை திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு குறிப்பிட்டார்.
Chief Minister Stalin has announced that the DMK election manifesto will be released tomorrow evening.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.