FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் அமளி...

Updated On : 23 ஜூன் 2026, 10:19 am IST
திமுகவினர் அமளி
பகிர்:

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் விஜய் பதிலளித்து சட்டப்பேரவையில் பேசி வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு, மின் வெட்டு, போதைப்பொருள் புழக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்துப் பேசினார்.

Advertisement

Advertisement

இவை அனைத்திற்கும் கடந்த திமுக அரசுதான் காரணம் என்றும் 10 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை, தவெக அரசு தான் டிஜிபியை நியமித்தது என்றும் திமுக அரசை முதல்வர் கடுமையாக விமர்சித்தார். மேலும் டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் வசூலித்தனர் என்றும் முதல்வர் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.

முதல்வர் தனது உரையை முடித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பேரவைத் தலைவர் தெரிவித்தார். எனினும் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

'முதல்வர் இதுவரை பேசவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறினார்கள். ஆனால் இப்போது பேச ஆரம்பித்ததும் அமளியில் ஈடுபடுகின்றனர்' என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.

இறுதியாக மேலும் திமுக அரசை முதல்வர் விமர்சித்த நிலையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

summary

Opposition to CM Vijay speech, DMK members create a ruckus in the Assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments