முகப்பு
தமிழ்நாடு

திமுகவில் 2 அமைச்சர்களுக்குப் பதில் மகன்களுக்கு வாய்ப்பு!

திமுகவில் அமைச்சர்களுக்குப் பதில் மகன்கள் அளிககப்பட்ட வாய்ப்பு பற்றி..

Updated On : 28 மார்ச், 2026 at 12:01 PM
பொன்முடி மகன், காந்தியின் மகன் - DPS
பகிர்:

தமிழகத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் வெளியானதைத் தொடர்ந்து, திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறுகிறது. திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக ஆகிய கட்சிகளின் தலைமையில் நான்கு முனைப் போட்டிகள் நிலவுகின்றன.

அதன்படி, திமுக கூட்டணியில் போட்டியிடும் 164 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்துமுறை 28 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இரண்டு அமைச்சர்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அவர்களது மகன்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் பொன்முடியும், அமைச்சர் காந்தியும் இந்த சமயம் போட்டியிடவில்லை.

பொன்முடிக்கு பதிலாக அவரது மகன் கௌதம சிகாமணி - திருக்கோவிலூர் தொகுதியிலும், எம். ஆர். காந்தியின் மகன் வினோத் காந்தி - ராணிப்பேட்டை தொகுதியிலும் களம் காண்கின்றனர்.

summary

Following the announcement of the constituencies allotted to the parties contesting as part of the DMK alliance in Tamil Nadu, DMK President and Chief Minister M.K. Stalin released the list of candidates.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.