சட்டப்பேரவைத் தொகுதி அறிமுகம்: ஓட்டப்பிடாரம் (தனி)
ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதி - 217
வாக்காளர்கள்
ஆண்கள் - 1,17,432
பெண்கள் - 1,23,502
மூன்றாம் பாலினத்தவர் - 54
மொத்தம் - 2,40,988
ஸ்ரீவைகுண்டம், தாத்துக்குடிடாரம் ஸ்ரீ வைகுண்ட 3 வட்டங்களில் உள்ள பகுதிகளை உள்ளடக்கியது தனித் தொகுதியான ஓட்டப்பிடாரம். இந்தத் தொகுதியில் தூத்துக்குடி மாநகராட்சியின் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 8 வார்டுகள் இடம்பெற்றுள்ளன.
இப்பகுதியில் உப்பு உற்பத்தி, மானாவாரி விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெற்று வருகிறது. வாகைக்குளத்தில் தூத்துக்குடி விமான நிலையம் அமைந்திருப் பது தொகுதியின் கூடுதல் சிறப்பாகும்.
சிப்காட் மேலும், இத்தொகுதியில் தொழிற்பூங்கா, மின்சார கார் தயாரிப்பு தொழிற் சாலை அமைந்துள்ளதும், உரத் தொழிற்சாலை, கனநீர் ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சா லைகள் உள்ளதும் இந்தத் தொகுதி குறிப்பிடத் தக்க வளர்ச்சியை நோக்கி செல்வதை எடுத்துக் காட்டுகிறது.
புதியம்புத்தூர் பகுதியில் பின்னலாடை தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொகுதியில் இப்போது பெரும்பாலான பகுதிகளில் காற்றாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.
நாடார், பட்டியலினத்தவர் பெரும்பான்மை சமூகத்தினராக உள்ளனர். வேளாளர், மறவர்.நாயுடு சமூகத்தினர் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
இந்தத் தொகுதியில் 1962-க்குபின்னர் நடைபெற்ற தேர்தல்களில் அதிகபட்சமாக அதிமுக 4 முறையும். திமுக, காங்கிரஸ் தலா 3 முறையும் வென்றுள்ளன.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் 1,17,432 ஆண்கள், 1,23,502 பெண்கள், 54 இதரர் என மொத்தம் 2,40988 வாக்காளர்கள் உள்ளனர்.
தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது, விளைநிலங்கள் எல்லாம் காற்றாலைகளுக்கும், சூரிய மின்சக்தி அமைப்பதற்கும் தாரை வார்க்கப்பட்டு வருவதும் முக்கிய பிரச்னைகளாக எழுந்துள்ளது.
இப்பகுதியில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால், ஏராளமான இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல்ல வேண்டிய நிலையே உள்ளது. மானாவாரி விவசாயம் என்பதால் போதிய மழை இல்லாத காலங்களில் விவசாயி களுமேகூட பிழைப்பைத் தேடி வெளியூர் செல் லும் நிலை உள்ளது.
பொட்டலூரணி பகுதியில் உள்ள மீன்கழிவு ஆலைகள் அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுத் துவதாக கூறி, அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொட்ட லூரணி பகுதியிலுள்ள கழிவுமீன் நிறுவனங்கள் மூடப்பட வேண்டும்.
செக்காரக்குடியைத் தலைமையாகக் கொண்டு, தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்கவேண்டும்.
அங்கு அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங் கப்பட வேண்டும்.
மழைக்காலத்தில், செக்காரக்குடி பெரிய ஓடை யில் புதுக்கோட்டை வழியாக வீணாகிக் கடலில் கலக்கும் மழை நீரைத் தடுத்து நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும்.
இதன் மூலம் உவர்ப்பு நீராக உள்ள செக்காரக்குடி பகுதியில் நிலத்தடி நீர் நன்னீராக மாறும். அதை ஆதாரமாகக் கொண்டு, குடிநீர்த் தேவை, விவசாயத் துக்கும் பயன்படுத்தலாம்.
செக்காரக்குடி, பொட்டலூரணி, தெய்வச்செயல் புரம், எல்லைநாயக்கன்பட்டி, வல்லநாடு, காரசேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி உள்ளிட்ட பகுதி களைநீண்ட தூரத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குள் கொண்டுவந்துள்ளனர். மீண்டும் இந்த ஊர்களை தூத்துக் குடி வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்லைக் குள் கொண்டுவர வேண்டும்.