திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்: கலாநிதி வீராசாமி
திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளதைப் பற்றி...
திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக எம்பி கலாநிதி வீராசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “காங்கிரஸின் துரோகத்தையும் மீறி, திமுக ஒரு திறமையான எதிர்க்கட்சியாகச் செயல்பட முடிவு செய்துள்ளது.
Advertisement
Advertisement
தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சியமைப்பதை அதிமுகவும் பாஜகவும் தொடர்ந்து தடுத்து வருகிறது. இது மக்களின் தீர்ப்பை அவமதிப்பதாகும். ஜனநாயகம் வெல்லும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடில் ஆட்சி அமைக்க 118 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளதால், தவெகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 112 (107+5) ஆக உயர்ந்துள்ளது. எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் 6 உறுப்பினர்கள் தேவைப்படுகிறது.
ஆளுநர் இரண்டு நாள்களில் ஆதரவை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பதாக இவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விஜய்யால் பெரும்பான்மை உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அரசமைப்பது தொடர்பாக திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களுடன் அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேச்சு நடத்தி வருவதாக நம்பத்தகுந்த தகலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இதற்கிடையில், திமுக எம்பிக்களில் ஒருவரான கலாநிதி வீராசாமி, திமுக தொடர்ந்து எதிர்க்கட்சியாக செயல்படும் என்று தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
DMK Member of Parliament Kalanidhi Veerasamy has stated that the party will function as the opposition.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.