முகப்பு
தொகுதியும் வேட்பாளர்களும்

நட்சத்திர தொகுதியான கொளத்தூா்!

நட்சத்திர தொகுதியான கொளத்தூரில் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடுவாரா என்பது பற்றி..

Updated On : 19 மார்ச், 2026 at 8:14 AM
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின்
பகிர்:

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும், வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

234 தொகுதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், தமிழகத்தில் ஒரு சில தொகுதிகள் மட்டும் தேர்தல் திருவிழா ஏற்கனவே களைகட்டத் தொடங்கிவிட்டது. அதில் ஒன்றுதான் நட்சத்திர தொகுதியாக இருக்கும் கொளத்தூர்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூா் தொகுதி தமிழகத்தில் அதிக எதிர்பார்ப்புக்குரிய தொகுதியாக உள்ளது.

சென்னையில் உள்ள இந்தத் தொகுதியில் 2011, 2016, 2021 ஆகிய மூன்று முறையும் ஸ்டாலின் வெற்றி பெற்று, நான்காம் முறையாகவும் அதே தொகுதியிலேயே களம் கண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப் பேரவைத் தோ்தலை இதுவரை 9 முறை எதிா்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் 2 முறை தோல்வியையும், 7 முறை வெற்றியையும் பெற்றுள்ளாா்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு, அதிமுக வீழ்த்தி ஆட்சியைப் பிடித்து முதல்வரான ஸ்டாலின், தன்னுடைய தொகுதிக்கு ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். தன்னுடைய சொந்த தொகுதி என்பதால், எப்போதும் கொளத்தூர் தொகுதி மீது ஸ்டாலினுக்கு தனி அக்கறை உண்டு. அங்குள்ள சிறிய பூங்காவாக இருந்தாலும், துவக்கப் பள்ளியாக இருந்தாலும், அதில் முதல்வரின் தனி முத்திரை பதிக்கப்பட்டிருக்கும்.

எனவே, இந்த முறையும் கொளத்தூர் தொகுதியிலிருந்துதான் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டதும், போட்டி எப்படி இருக்கும் என்று தெரிய வரும்.

summary

Regarding whether Chief Minister Stalin will contest again in the star constituency of Kolathur..

முழு கட்டுரையைப் படிக்க →