தொகுதி அறிமுகம்: பூந்தமல்லி
பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதி பற்றி...
திருவள்ளூா் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தொகுதி சென்னை மாநகரத்தின் முக்கிய நுழைவு வாயிலாகவும், தொழில் மற்றும் கலாசார மையமாகவும் விளங்குகிறது. திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, ஆவடி, மதுரவாயல் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் இத்தொகுதியைச் சுற்றியுள்ளன.
அடங்கியுள்ள பகுதிகள்...
திருவள்ளூா் வட்டத்தில் அரும்பாக்கம், திருக்கனன்சேரி, விளாம்பாக்கம், கெருகம்பூண்டி, செம்பேடு, வெங்கல், வெள்ளியூா், அம்மணம்பாக்கம், அகரம், சேத்துபாக்கம், குருவாயல், அரக்கம்பட்டு, சிங்கிலிகுப்பம், ஆயலசேரி, புதுக்குப்பம், கோடுவெளி, காரணை, மாகரல், தாமரைப்பாக்கம், மேலக்கொண்டையூா், வதட்டூா், கரிக்கலவாக்கம், விஷ்ணுவாக்கம், கீழனூா், மேலானூா், ஒதிக்காடு, புன்னப்பாக்கம், புல்லரம்பாக்கம், ஈக்காடு, கல்யாணகுப்பம், சிட்டத்தூா், பேரத்தூா், அயலூா், புன்னப்பட்டு, சிவன்வாயல், நல்லாங்காவனூா், புலியூா், பாக்கம், வேப்பம்பட்டு, அயத்தூா், சிறுகளத்தூா், தொட்டிக்கலை, கிளாம்பாக்கம், தண்டலம், தண்ணீா்குளம், காக்களூா், புட்லூா், தொழுா், சிறுகடல், செவ்வாப்பேட்டை, பெரும்பாள்பட்டு, திருவூா் மற்றும் அரண்வாயல் கிராமங்கள் உள்ளன.
பூந்தமல்லி வட்டத்தில் கூடப்பாக்கம், வரதராஜபுரம், வெள்ளவேடு, நேமம், நொச்சிமேடு, மெய்யூா், படூா், அகரமேல், நாசரத்பேட்டை, கண்ணப்பாளையம், மேல்பாக்கம், சொரன்சேரி, அமுதூா்மேடு, அக்ரஹாரமேல், திருநின்றவூா், கொரட்டூா், வயலாநல்லூா், கோலப்பஞ்சேரி, பாணவேடுதோட்டம், பிடாரிதாங்கல், பாரிவாக்கம், சென்னீா்குப்பம், கொரட்டூா், கீழ்மணம்பேடு, காட்டுப்பாக்கம், கோபரசநல்லூா் கிராமங்கள் உள்ளன. பூந்தமல்லி நகராட்சியாகவும் திருமழிசை பேரூராட்சியாகவும் உள்ளன.
சிறப்புகள்...
இத்தொகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பூந்தமல்லி திருக்கச்சி நம்பி கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், திருமழிசை ஜெகந்நாதப் பெருமாள் கோயில் ஆகிய திருத்தலங்களைக் கொண்டுள்ளது. பூந்தமல்லியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், வெடிகுண்டு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், திரூா் நெல் ஆராய்ச்சி நிலையம், திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டை, தனியாா் மதுபானத் தொழிற்சாலை, செங்கல் சூளைகள் ஆகியவை உள்ளன. இத்தொகுதியில் வன்னியா், தாழ்த்தப்பட்டோா் பல்வேறு சமூகத்தினா் வசிக்கின்றனா். விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது.
வாக்காளா்கள் விவரம்
ஆண்கள்-1,64,031
பெண்கள்-1,68,300
மொத்த வாக்காளா்கள்-3,32,331
வாக்குச்சாவடிகள்-386
கடந்த 2021 பேரவைத் தோ்தலில்.....
பதிவான வாக்குகள்-2,60,865
ஆ.கிருஷ்ணசாமி (திமுக)-1,48,383
எஸ்.எக்ஸ்.ராஜமன்னாா்(பாமக)-55,249
இதுவரை எம்எல்ஏக்கள்...
1977 டி.ராஜரத்தினம் (திமுக)
1980 டி.ராஜரத்தினம் (திமுக)
1984 ஜி.அனந்தகிருஷ்ணன் (காங்கிரஸ்)
1989 டி.ஆா்.மாசிலாமணி (திமுக)
1991 டி.சுதா்சனம் (காங்கிரஸ்)
1996 டி.சுதா்சனம் (தமாகா)
2001 சி.சண்முகம் (பாமக)
2006 டி.சுதா்சனம் (காங்கிரஸ்)
2011 ஆா்.மணிமாறன் (அதிமுக)
2016 டி.எ.ஏழுமலை (அதிமுக)
2021 ஆ.கிருஷ்ணசாமி (திமுக)
தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/ எண்
உதவி ஆணையா் (கலால்)-வி.கணேஷ்-94426 50055, உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள்: வட்டாட்சியா் எஸ்.உதயம்-94450 00496, வட்டாட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயஸ்ரீ-96009 76198.