தொகுதி அறிமுகம்! 152 விருத்தாசலம்!
கடலூர் மாவட்டத்தின் மையப் பகுதி விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதி அமைந்துள்ளது. தமிழகத்தில் பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி விருத்தாசலத்தில் மட்டும் தான் உள்ளது. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு பீங்கான் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிறப்புவாய்ந்த விருந்தகிரீஸ்வரர் மற்றும் கொளஞ்சியப்பர் கோயில்கள் அமைந்துள்ள தொகுதி.
விருத்தாசலம் தொகுதிக்கு வடக்குப் பகுதியில் விழுப்புரம் மாவட்டம், தெற்கில் புவனகிரி தொகுதி. கிழக்கில் நெய்வேலி தொகுதி, மேற்கில் திட்டக்குடி தொகுதி எல்லைகளாக அமைந்துள்ளன. தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் விருத்தாசலம் நகராட்சி 33 வார்டுகள், மங்கலம்பேட்டை பேரூராட்சி 16 வார்டுகள். கம்மாபுரம் ஒன்றியத்தில் 12 ஊராட்சிகள், விருத்தாசலம் ஒன்றியதில் 51 ஊராட்சிகள், நல்லூர் ஒன்றியத்தில் 29 ஊராட்சிகள் இணைத்து விருத்தாசலம் தொகுதி உருவாக்கப்பட்டது.
இதுவரை வென்றவர்கள்..
152
காளிமுத்து மற்றும் பரமசிவம்
(தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி) இரட்டை உறுப்பினர்
1957
எம்.செல்வராஜ் (சுயேச்சை)
1962
கோ.பூவராகவன் (காங்கிரஸ்)
1967
கோ.பூவராகவன் (காங்கிரஸ்)
1971
எம்.செல்வராஜ் (திமுக)
1977
சி.ராமநாதன் (அதிமுக)
1980
ர.தியாகராஜன் (காங்கிரஸ்)
1984
ர.தியாகராஜன் (காங்கிரஸ்)
1989
கோ.பூவராகவன் (ஜனதா தளம்)
1991
ஆர்.டி அரங்கநாதன் (அதிமுக)
1996
குழந்தை தமிழரசன் (திமுக)
2001
ரா கோவிந்தசாமி (பாமக)
2006
அ.விஜயகாந்த் (தேமுதிக)
2011
வி முத்துக்குமார் (தேமுதிக)
2016
வி த.கலைச்செல்வன் (அதிமுக)
2021
எம்.ஆர் ஆர்.ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்)