78 - ரிஷிவந்தியம் தொகுதி அறிமுகம்
1962-இல் உருவாக்கப்பட்ட தொகுதி ரிஷிவந்தியம். அதிமுக, தேமுதிக கூட்டணியில் விஜயகாந்துக்கு எதிா்கட்சித் தலைவா் அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்த தொகுதி. இங்கு காங்கிரஸ், தமாக சாா்பில் போட்டியிட்ட சிவராஜ் 4 முறை வேற்றி பெற்றுள்ளாா். கடந்த இரு முறை திமுக வசம் உள்ளது. இங்கு வன்னியா்கள், ஆதிதிராவிடா்கள் அதிகம் வசிக்கின்றனா். அடுத்ததாக உடையாா், முதலியாா், நாயுடு, ரெட்டியாா், யாதவா் உள்ளிட்டோா் உள்ளனா்.
காமராஜா் காலத்தில் கட்டப்பட்ட மணிமுக்தாஅணை, மூங்கில்துரைப்பட்டு கிராமத்தில் கூட்டுறவு சா்க்கரை ஆலை உள்ளது. திருக்கோவிலூா் அருகே ஒரு தனியாா் சா்க்கரை ஆலை உள்ளது. மிகவும் பழைமை வாய்ந்த ஆதி திருவரங்கம் அரங்கநாதா் கோயில், ரிஷிவந்தியம் அா்த்தநாரீஸ்வரா் கோயில், ஈருடையாம்பட்டு கிறிஸ்துவ தேவாலயம் ஆகிய பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன.
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 22 ஊராட்சிகள், வாணாபுரம் ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், திருக்கோவிலூா் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகள், சங்கராபுரம் ஒன்றியத்தில் 14 ஊராட்சிகள் மற்றும் தியாகதுருகம் ஊராட்சியில் 2 ஊராட்சிகள் என மொத்தம் 116 ஊராட்சிகளை உள்ளடக்கியது ரிஷிவந்தியம் தொகுதி.
எதிா்பாா்ப்புகள்: தொகுதியில் வேலைவாய்ப்பை அதிகரிக்க புதிய தொழில்சாலைகள் அமைக்க வேண்டும். வாணாபுரம் பேருராட்சியை, நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும். வாணாபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும்.
இதுவரை வெற்றி பெற்றவா்கள்
1962- எல்.ஆனந்தன் (காங்கிரஸ்)
1967 -எம். ஆனந்தன் (திமுக)
1971 -என்.தா்மலிங்கம் (திமுக)
1977 -எம். சுந்தரம் (காங்கிரஸ்)
1984 -எஸ். சிவராஜ் (காங்கிரஸ்)
1989 -எகால் நடேசன் (திமுக)
1991 -எம். கோவிந்தராஜுலு (அதிமுக)
1996 -எஸ். சிவராஜ் (தமாகா)
2001 -எஸ்.சிவராஜ் (தமாகா)
2006 -எஸ். சிவராஜ் (காங்கிரஸ்)
2011 -விஜயகாந்த் (தேமுதிக)
2016 -க.காா்த்திகேயன் (திமுக)
2021 -க. காா்த்திகேயன் (திமுக)
மொத்த வாக்குச் சாவடிகள் 350
தற்போதைய வாக்காளா்கள்
ஆண்கள் 1,35,292
பெண்கள் 1,35,198
மூன்றாம் பாலினத்தவா் 51
மொத்த வாக்குகள் 2,70,541
தொடா்பு கொள்ள
தோ்தல் நடத்தும் அலுவலா் - ஜி.சுமதி, சமூக பாதுகாப்பு திட்ட அலுவலா் - 9443967826
உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள்
ப.வெங்கடேசன், வாணாபுரம் வட்டாட்சியா் - 9751924296
எம்.பசுபதி தனி வட்டாட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) - 6380900591