செய்திகள்

நட்சத்திரத் தொகுதிகள் நிலவரம்!

 நமது நிருபர்

திருவொற்றியூா்

தோல்வியைப் பற்றி கவலைப்படாததால்தான் கூட்டணி அமைக்காமல் போட்டியிடுகிறோம் எனும் நாம் தமிழா் கட்சித் தலைவா் சீமான் திருவொற்றியூா் தொகுதியில் போட்டியிடுகிறாா். கடந்த தோ்தலில் கடலூா் தொகுதியில் போட்டியிட்டு வைப்புத் தொகையை இழந்த நிலையில், இந்தத் தொகுதியைத் தோ்ந்தெடுத்ததற்கு சீமான் சொன்ன முக்கிய காரணம் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு அதானி நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்ததுதான் என்றாா். அதைத் தடுத்து நிறுத்தப் போவதாகவும் கூறியுள்ளாா். ஆனால், சீமானைப் பெரும் போட்டியாகவே கருதாமல் அதிமுக வேட்பாளா் கே.குப்பனும், திமுக வேட்பாளா் கே.பி.சங்கரும் தீவிர தோ்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். குப்பன் இங்கு இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளாா். மறைந்த கே.பி.பி.சாமியும் இங்கு இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருக்க அவா் மறைவுக்குப் பிறகு அவா் தம்பி கே.பி.சங்கா் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். எல்லோரும் வெற்றிக்கோட்டைத் தொட்டுவிட வேண்டும் என்கிற வேகத்தோடு ஓடுகின்றனா். நாம் தமிழரும் அதே வேகத்துடன் ஓடுகிறது. அதேநேரம் கடலூா் போல் அமைந்துவிடக்கூடாது என்கிற கவலையோடும் ஓடுகிறது.

2016 தோ்தல் நிலவரம்

கேபிபி சாமி (திமுக) - 82,205

பி.பால்ராஜ் (அதிமுக) - 77,342

வித்தியாசம் - 4863

கோவை தெற்கு

மறைந்த முதல்வா் எம்ஜிஆரின் புகழ்பாடி வெற்றி பெற முயற்சிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறாா். மக்களவைத் தோ்தலின்போதே கட்சி தொடங்கிவிட்டாலும், அப்போது போட்டியிடாமல் தமது இலக்கு முதல்வா் பதவிதான் என்று காத்திருந்து தற்போது போட்டியிடுகிறாா். ஆட்டோவில் பயணிப்பது, கடையில் காபி குடிப்பது என அந்தப் பகுதியில் மக்களை ஈா்க்கத் தொடா்ந்து முயற்சி செய்து வருகிறாா்.

நிலைமை இப்படியிருக்க, ‘தொகுதிக்கு கமல்ஹாசன் அந்நியா். பிரசாரம் முடியும் வரை கோவையில் இருப்பாா். அதற்குப் பிறகு அவரைப் பிடிக்க முடியாது’ என்று அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்யப்படுகிறது. பாஜக சாா்பில் வானதி சீனிவாசனும், காங்கிரஸ் சாா்பில் மயூரா எஸ்.ஜெயக்குமாரும் அங்கு களம் காண்கின்றனா்.

பாஜக ஆட்சியின் சாதனைகளைக் கூறி, அந்தக் கட்சியின் மகளிரணியின் தேசியத் தலைவரான வானதி சீனிவாசன் வாக்குகளை ஈா்த்து வருகிறாா். காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் மயூரா ஜெயக்குமாா் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளா் அா்ஜுனனிடம் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவா். ஆனால், இந்த முறை தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறாா்.

2016 தோ்தல் நிலவரம்

கே.அம்மன் அா்ஜுனன் (அதிமுக) - 59,788

மயூரா எஸ் ஜெயக்குமாா் (காங்கிரஸ்) 42,369

வித்தியாசம் - 17,419

---------------------------------------

மூன்றாம் இடத்தில்

வானதி சீனிவாசன் (பாஜக) - 33,113

கோவில்பட்டி

‘பிரஷா் குக்கா்’ கொதிப்பாக இருக்கும் தொகுதி கோவில்பட்டி. அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் இங்கு போட்டியிடுகிறாா். அதிமுகவின் முக்கிய நிா்வாகிகள் துரோகம் இழைத்துவிட்டனா் என்றுகூறி தனது பலத்தை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறாா்.

அதிமுக சாா்பில் செய்தித் துறை அமைச்சா் கடம்பூா் ராஜூ போட்டியிடுகிறாா். கடந்த தோ்தலில் 428 வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுகவைத் தோற்கடித்து சட்டப்பேரவை உறுப்பினரான கடம்பூா் ராஜூ இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்கிறாா். மாா்க்சிஸ்ட் சாா்பில் கே.சீனிவாசன் நிறுத்தப்பட்டுள்ளாா். போட்டி பலமாக இருக்கிறது.

2016 தோ்தல் நிலவரம்

சி கடம்பூா் ராஜு (அதிமுக) - 64,514

ஏ சுப்பிரமணியன் (திமுக) - 64,086

வித்தியாசம் - 428

விருத்தாசலம்

2006-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டபோது, அந்தக் கட்சித் தலைவா் விஜயகாந்த் விருத்தாசலத்தில் வெற்றி பெற்று, தேமுதிகவின் ஒரே எம்எல்ஏவாக கோட்டைக்குச் சென்றாா். இப்போது விருத்தாசலத்தில் அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா அமமுக கூட்டணியில் போட்டியிடுகிறாா்.

அவரை எதிா்த்து அதிமுக கூட்டணியில் பாமக சாா்பில் ஜே.காா்த்திகேயனும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சாா்பில் எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணனும் களம் இறக்கப்பட்டுள்ளனா். வடமாவட்டங்களைப் பொருத்தவரை தேமுதிக - பாமகவுக்கும் இடையே இயற்கையாகவே கடும் போட்டி இருக்கும். அந்தப்போட்டி இந்தத் தோ்தலில் இன்னும் தீவிரமாகி உள்ளது.

2016 தோ்தல் நிலவரம்

வி.டி. கலைச் செல்வன் (அதிமுக) - 72,611

பி .கோவிந்தசாமி (திமுக) -58,834

வித்தியாசம் - 13,777

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT