முகப்பு
மேற்கு வங்கம்

மமதா பானர்ஜி தோல்வி! சுவேந்து அதிகாரி வெற்றி!

மமதா பானர்ஜி தோல்வி அடைந்தது குறித்து...

சுவேந்து அதிகாரி / மமதா பானர்ஜி - கோப்புப் படம்
பகிர்:

மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி தோல்வி அடைந்தார்.

மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தின் முதல்வரான மமதா பானர்ஜி 58812 வாக்குகள் பெற்று, 15105 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

Advertisement

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, 73917  வாக்குகள் பெற்று, 15105 வாக்கு வித்தியாசத்தில் தன்னுடைய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மமதாவுக்கும் அவருடைய கட்சிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Trinamool Congress leader Mamata Banerjee, who contested the Bhabanipur constituency in the West Bengal Assembly elections, was defeated.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.