சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை ஒரு திட்டமிட்ட செயல்: பாஜக
சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது ஒரு திட்டமிட்ட செயல் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது குறித்து...
மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது ஒரு திட்டமிட்ட செயல் என்று பாஜக மாநிலத் தலைவர் சமிக் பட்டாச்சார்யா குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பவானிபூர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் புதன்கிழமை (மே 6) சுட்டுக்கொல்லப்பட்டார்.
வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள தோஹாரியா பகுதியில் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத் ராத் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
Advertisement
இந்தச் சம்பவத்துக்கு வன்மையான கண்டனங்களைப் பதிவுசெய்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் சமிக் பட்டாச்சார்யா, “இதுவரை, வன்முறையால் 311 தொண்டர்களை பாஜக இழந்துள்ளது. இதுதான் திரிணமூல் காங்கிரஸின் உண்மையான முகம். எந்தவொரு பதிவையும் (ட்வீட்) பதிவிடுவதற்கு, அவர்களுக்கு அறநெறியோ அல்லது அரசியல் உரிமையோ துளியும் இல்லை.
இந்த நேரத்தில், இது குறித்து நான் எந்த அரசியல் ரீதியான கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. கொலை செய்யப்பட்ட விதம் சாதாரணமானதல்ல. அது பயிற்சி பெற்ற ஒரு துப்பாக்கிச் சுடும் வீரரால் செய்யப்பட்டுள்ளது. அது ஒரு முழுமையான திட்டத்துடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதன் பின்னரே இதைப் பற்றி பேசுவோம்” எனத் தெரிவித்த்தார்.
BJP State President Samik Bhattacharya has stated that the shooting and killing of Suvendu Adhikari's PA in West Bengal was a premeditated act.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.