வேலைவாய்ப்பு

"நாகலாபுரம் அரசு ஐடிஐ-இல் பணிமனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்'

தினமணி

நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகலாபுரம் உமறுப்புலவர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள மின்சாரப் பணியாளர் (E‌l‌e​c‌t‌r‌i​c‌i​a‌n) பிரிவு பணிமனை உதவியாளர் பணிக்கு இன சுழற்சி அடிப்படையில் பொதுப்பிரிவில் முன்னுரிமை முறையில் நேரடி நியமனம் செய்யும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஊதியம் 5200 - 20200 GPட - 1900 என்ற விகிதத்தில் 1.12.2016 அன்று பட்டியலினத்தவர்கள் பிரிவினருக்கு 18முதல் 35 வயது வரையும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 32 வயது வரையும் இருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் (E‌l‌e​c‌t‌r‌i​c‌i​a‌n) தொழிற்பிரிவில் NT​C​N​AC​ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.  விண்ணப்பத்தில் பெயர், கல்வித்தகுதி, தொழில்நுட்ப கல்வித்தகுதி, சாதி, முன் அனுபவ விவரம், முன்னுரிமை விவரம், வீட்டு முகவரி மற்றும் செல்லிடப்பேசி எண்,  வேலைவாய்ப்பு அட்டை எண் மற்றும் புதுப்பித்த நாள் ஆகியன இடம்பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பத்தை ஜன.10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முதல்வர், உமறுப்புலவர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், நாகலாபுரம், தூத்துக்குடி மாவட்டம் - 628904 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவினரால் பரிசீலனை செய்து தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT