இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷ்ன்டு ஆபீசர்(மதபோதகர்) பயிற்சி 83-84 சேர்க்கையின் படி பதபோதகர் பணியில் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. பண்டிட் - 59
2. பண்டிட் (கூர்கா) - 02
3. மவுலலி - 02
4. புத்த துறவி - 02
வயதுவரம்பு: 01.10.2017 தேதியின்படி 27 - 34க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்று குறிப்பிட்ட பிரிவில் மதபோதகருக்கு தேவையான தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.11.2016
மேலும் முழுமையான விவரகங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.