சென்னை நோய்தடுப்பு மையத்தில் கிளார்க் வேலை
சென்னையில் செயல்பட்டு வரும் நோய் தடுப்பு மையத்தில் "National Institute of Epidemiology" காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு
சென்னையில் செயல்பட்டு வரும் நோய் தடுப்பு மையத்தில் "National Institute of Epidemiology" காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Upper Division Clerk
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,000
வயதுவரம்பு: 18 - முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இளநிலை பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, தட்டச்சு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை "The Director, National Institute of Epidemiology" என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி அல்லது IPO-வாக எடுத்து செலுத்த வேண்டும்.
பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.nie.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
The Director-in-charge, National Institute of Epidemiology, Second Main Road, Tamil Nadu Housing Board, Ayapakkam, Chennai-600 077.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.12.2017