முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் 2.8% உயர்ந்தது!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 11:46 AM
பங்குச்சந்தை வணிகம்
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 11:39 AM

நேற்று பங்குச்சந்தைகள் கடுமையான சரிவைச் சந்தித்த நிலையில் இன்று(பிப். 25) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

ஐடி பங்குகள் மற்றும் தனியார் வங்கிப் பங்குகள் நிலையான வர்த்தகத்தில் இருந்து வருவதால் பங்குச்சந்தை இன்று ஏற்றம் கண்டு வருகின்றன.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 11:41 AM

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,530.12 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 504.19 புள்ளிகள் அதிகரித்து 82,730.11 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Advertisement

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 179.40  புள்ளிகள் உயர்ந்து 25,589.35 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் தலா 2 - 3 சதவீதம் உயர்ந்தன. இண்டிகோ, பவர் கிரிட் கார்ப்பரேஷன், லார்சன் & டூப்ரோ, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்களும் முக்கிய லாபங்களைப் பெற்றன.

நிஃப்டி மிட்கேப் 100 0.6 சதவீதமும் ஸ்மால்கேப் 100 0.8 சதவீதமும் உயர்ந்தன.

துறை ரீதியாக நிஃப்டி ஐடி குறியீடு 2.8% சதவீதம் உயர்ந்து அதிகபட்ச லாபத்தைப் பெற்றது, உலோகங்கள் குறியீடு 2.5 சதவீதம் உயர்ந்தது.

summary

Stock Market: Nifty Above 25,600, Sensex Up 600 Points; Metals, IT Rise

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.