முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு! ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

Updated On : 10 ஏப்ரல் 2026, 11:38 am IST
கோப்புப் படம் - ANI
பகிர்:

நேற்று(ஏப். 9) பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்த நிலையில் வாரத்தின் கடைசி நாளான இன்று(ஏப். 10) உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,121.01 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 657.67 உயர்ந்து 77,292.62 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 197.90 புள்ளிகள் உயர்ந்து 23,973.00 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Advertisement

Advertisement

நிஃப்டி50 குறியீட்டில் ஏசியன் பெயிண்ட்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஐஷர் மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டின.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.97 சதவீதம், 1.6 சதவீதம் உயர்ந்துள்ளன.

அதேபோல சென்செக்ஸ் 30 பங்குகளில் ஹெச்சிஎல் டெக், சன் பார்மா, டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் சரிந்தும் இதர பங்குகள் ஏற்றத்துடனும் வரதகமாகின்றன.

துறைவாரியாகப் பார்க்கும்போது, நிஃப்டி ரியல் எஸ்டேட் துறை பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டன. நிஃப்டி பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், நிதி சேவைகள், மீடியா உள்ளிட்ட துறைகளும் ஏற்றமடைந்துள்ள நிலையில் ஐடி பங்குகள் கடுமையாகச் சரிந்தன.

கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 96.44 டாலராக உள்ளது.

summary

Stock Market: Sensex rises 800 pts, Nifty eyes 24,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.