வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் செயலகத்தில் பணி

ராஷ்டிரபதி பவனில் (குடியரசுத் தலைவர் செயலகத்தில்) 2017-18-ஆம் ஆண்டிற்கான 66 மாலி கிரேடு III பணியிடங்களுக்கான

ஆர். வெங்கடேசன்

ராஷ்டிரபதி பவனில் (குடியரசுத் தலைவர் செயலகத்தில்) 2017-18-ஆம் ஆண்டிற்கான 66 மாலி கிரேடு III பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Mali Grade-III (New Delhi) - 58
2. Mali Grade-III (Hyderabad) - 04
3. Mali Grade-III (Shimla) - 04
பணி இடம்: புது தில்லி, ஹைதராபாத், ஷிம்லா
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தேசிய திறன் தகுதி கட்டமைப்பு பிரிவு 4 சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.650 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rashtrapatisachivalaya.gov.in/sites/default/files/Notification-Mali.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்

நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்

SCROLL FOR NEXT