வேலைவாய்ப்பு

ஒலிபரப்புத்துறையில் வேலை: 14க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

நொய்டாவில் செயல்பட்டு வரும் "Broadcast Engineering Consultants India Ltd" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு

ஆர். வெங்கடேசன்

நொய்டாவில் செயல்பட்டு வரும் "Broadcast Engineering Consultants India Ltd" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Engineer (Civil) - 03

சம்பளம்: மாதம் ரூ.20,000 - 25,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் அல்லது 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Electrician - 05
பணி: Plumber - 05
பணி: Mason - 05

சம்பளம்: மாதம் ரூ.16,182

தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் எலக்ட்ரீஷியன், பிளம்பர் பிரிவில்  உரிமம் பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் Broadcast Engineering Consultants India Ltd என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Assistant General Manager (HR), BECIL Bhawan, C-56/A-17, Sector -62, Noida-201 307

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.07.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.becil.com என்ற இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

போதைப் பொருள் விற்றதாக கல்லூரி மாணவா் கைது

ஆட்டோ கவிழ்ந்ததில் சிறுமி உயிரிழப்பு

இடி தாக்கியதில் பெண் உயிரிழப்பு!

சேரன்மகாதேவியில் விவசாயி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT