வேலைவாய்ப்பு

கிராம தொழிற்சாலைகள் ஆணையத்தில் அதிகாரி வேலை

ஆர். வெங்கடேசன்

மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய சிறு குறு நடுத்தர தொழில்கள் அமைப்பின் துணைப் பிரிவாக செயல்பட்டு வரும் கிராம தொழிற்சாலைகள் ஆணையத்தில் காலியாக உள்ள 342 குரூப்-பி கெசட்ட அதிகாரிகள், கெசட்ட அல்லாத குரூப் சி உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advt. No.Adm.-I/NGR/KVIC/2(30)/2017-18

மொத்த காலியிடங்கள்: 342

பணி: GROUP – B (I) - 54
சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தர ஊதியம் ரூ. 5,400

பணி: GROUP– B (II) - 46
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200

பணி: GROUP–C  - 242
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம்

வயதுவரம்பு: 35க்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தகுதி: பொறியியல் துறையில் டெக்ஸ்டைல், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி பிரிவில் பட்டம் பெற்றவர்கள், அறிவியல், சட்டம், சிஏ, எம்பிஏ(நிதி), புள்ளியியல், பொருளாதாரம், வர்த்தகம் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு (கணினி), மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.kvic.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.11.2017

கணினி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23,24.12.2017 தேதிகளில் நடைபெறலாம் என உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.kvic.org.in/kvicres/update/ModifiedAdvtKVICforWebsite.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT